சிறுகீரையின் சிறந்த சத்துக்கள்.. ஆண்கள் சாப்பிட வேண்டிய கீரை.. உள்ளுறுப்புகளுக்கு வலு தரும் சிறுகீரை
சென்னை: அனைவருக்கும் ஏற்றதாக கருதப்படும் சிறுகீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? இந்த கீரைகளை ஆண்கள் தவறவிடக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்? சிறுகீரையை இரவில் சாப்பிட கூடாது என்று சொல்வதன் அர்த்தம் என்ன?
சிறுகீரையில் வைட்டமின் A, B, C, இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை அடங்கியிருக்கின்றன.. வயது கூடிக்கொண்டு செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்து வரும்.. இதற்கு சிறுகீரை சிறந்த மருந்தாகும்..

கண்கள் கோளாறு: சிறுகீரையை உணவில் தவறாமல் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை.. இந்த கீரையிலுள்ள A வைட்டமின், பார்வை கோளாறுகளை அண்ட விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுத்து, விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.
சிறுகீரையில் கால்சியம் அதிகமாக உள்ளதால், வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் சமைத்து தர வேண்டும். இதனால் அவர்களின் பற்கள், எலும்புகள் உறுதியாகும். இரும்புச்சத்து உள்ளதால், ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கி, ரத்தவிருத்தியும் பெருகும்.
தண்டுகள்: சிறுகீரையின் தண்டுகளையும் சமையலுக்கு பயன்படுத்தலாம்.. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானம் எளிதாகி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது. விந்தணு குறைபாடு உள்ள ஆண்களுக்கு இந்த கீரை அருமருந்தாகிறது.. சமையலில் அடிக்கடி சேர்த்து கொண்டால், விந்தணுக்கள் பெருக்கம் அதிகமாகுமாம்..
இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு பலத்தை தரக்கூடியது இந்த சிறுகீரை. அந்தவகையில் சிறுநீர்ப்பையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.. இதனால், கற்கள் தேங்குவதில்லை.. சிறுநீரகத்தில் ஏற்கனவே கற்களை இருந்தாலும், சிறுகீரை சாப்பிட்டு வரும்போது அவை கரைந்து வெளியேறிவிடும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சிறுகீரையை வாரம் 2 முறையாவது சமையலில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.
கீரையின் வேர்கள்: பலரும், சிறுகீரையின் இலைகளை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் வேர்களை கீழே போட்டுவிடுவார்கள். ஆனால், இந்த வேர்களை நன்றாக அலசிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, மிளகுத்தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைத்து கொள்ள வேண்டும். இதில், 5-10 கிராம் அளவுக்கு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நினைவுத்திறன் பெருகுமாம்.
உடம்பில் ரத்த காயங்களை விரைந்து ஆற்றும் தன்மை சிறுகீரைக்கு உண்டு. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் வைத்து விழுதாக அரைத்து, சொறி, சிரங்கு, காயங்களுக்கு பூசுவார்கள். இதனால் குளிர்ச்சி கிடைப்பதுடன், காயமும் சீக்கிரமாக ஆறிவிடும். முகப்பருக்கள் இருந்தால், சிறுகீரை, மஞ்சள், முந்திரிப்பருப்பு இந்த மூன்றையும அரைத்து பூசினால் போதும்
நார்ச்சத்து: அதிக உடல் எடை கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இதுவாகும். மற்ற கீரைகளை போலவே, சிறுகீரையையும் இரவில் கீரை சாப்பிடக்கூடாது.. நிறைய நார்ச்சத்து உள்ளதால், எளிதில் ஜீரணமாகாது.. எனவே பகலில் சமைத்து சாப்பிடுவதே பெஸ்ட் வழி.












Click it and Unblock the Notifications