எகிறும் உயர் ரத்த அழுத்தம்.. சர்ன்னு கட்டுக்குள் வைக்கும் சூப்பர் உணவுகள்.. செம்பருத்தி இலை அருமை
சென்னை: உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையில் உள்ளவர்கள், எப்படி கட்டுக்குள் வைத்திருக்கலாம் தெரியுமா? இதற்கான குட்டி டிப்ஸ் இது.
பொதுவாக, உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம்.. குறிப்பாக நம்முடைய ரத்த நாளங்களின் சுவர்களில், அதிக வேகத்துடன் ரத்தம் தள்ளும்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.. ஒரு சிலருக்கு வயது காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் வரலாம்.. சிலருக்கு பாரம்பரிய ரீதியாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்...

உணவு முறைகள்: அதுமட்டுமல்ல, முறையற்ற உணவு முக்கியமான காரணம்.. உடல் பருமன், அதிகமாக உப்பு சாப்பிடுவது, மன அழுத்தம், தூக்கமின்றி, உடலுழைப்பு இல்லாதது போன்றவைகள் எல்லாமே உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
எனவே, உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.. சமையலில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டும்.. தினமும் ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையமும் அறிவுறுத்துகிறது.
மதுப்பழக்கம்: மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.. ஆல்கஹால் எந்த அளவுக்கு கெடுதியோ, அதே அளவுக்கு காஃபின் நிறைந்த காபி, சாக்லேட் போன்றவைகளும் அலர்ஜிதான்.. பேக்கரி உணவுகள், சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியம்.. பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சைக் காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உடலில் சேர்ந்தாலே, இதய செயல்பாடுகள் சீராக நடக்கும்.
சிறுதானியங்கள்: சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பொட்டாசியம் நிறைந்த உணவு அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும்.. குறிப்பாக, வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி, அவகேடா, மாதுளம்பழங்களை சாப்பிடலாம்.. ஸ்ட்ராபெரியில் பொட்டாசியம் + வைட்டமின் C நிறைந்துள்ளது.. தர்பூசணியில் பொட்டாசியம் + நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது.. மாம்பழத்தில் பொட்டாசியம் + பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
அதேபோல, காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கைந்து செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி, நாட்டுச்சர்க்கரை கலந்து தினமும் குடித்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
உடற்பயிற்சிகள்: நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும்.. மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.. 8 மணி நேரம் தூக்கமும் முக்கியம்.. அதேபோல, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால், நடைபயிற்சியும் முக்கியம்.. வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது ரத்த அழுத்தத்தை குறைப்பதாக, "பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசன்" என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications