Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொப்புளில்.. இரவில் 3 சொட்டு எண்ணெய் வைத்தால் போதும்.. மேஜிக் பாருங்க.. எண்ணை வைத்தால் இத்தனை நன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவில் தூங்கும்போது, தொப்புளில் எண்ணெய் விட்டு படுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதிலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும், ஒவ்வொரு பலன்கள் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது. அதில் சிலவற்றை பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

தூங்குவதற்கு முன்பு, நம்முடைய தொப்புள் பகுதியில் எண்ணெய்யை 2 சொடு தடவிக்கொண்டு தூங்குவது நம்முடைய பழக்கவழக்கத்தில் ஒன்றாக இருந்துள்ளது. இப்படி செய்வதால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

Super Health benefits of oil cleansing for belly button and Amazing Medicinal Uses of Neem Oil

என்ன காரணம்: இதற்கு காரணம், உடலின் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளி என்பது தொப்புள்தான்.. இந்த தொப்புளின் பின்னால், குறைந்தபட்சம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் உள்ளதாம். எனவேதான் குழந்தைகளுக்கு, தொப்புளில் தினமும் 2 சொட்டு எண்ணெய் விடுவதை நம் முன்னோர்கள் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

தொப்புளில் எண்ணெய் விட்டு வந்தால், கண் பார்வை கூர்மையடையும்.. எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களில் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் வறட்சி அடைந்துவிடும்.. எனவே குழந்தைகள் மட்டுமல்லாமல், கண்களுக்கு அதிக வேலையை தருபவர்கள், தினமும் தொப்புளில் எண்ணெய் வைக்கலாம். இதனால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

மூட்டுவலிகள்: அதேபோல, முழங்கால் மூட்டு வலிகள் இருப்பவர்களும், தொப்புளில் கடுகு எண்ணெய் விட்டுக் கொள்ளலாம். கால் நரம்புகள் வலியால் அவதிப்படுபவர்களும் தொப்புளில் கடுகு ண்ணெய் வைப்பதால், மூட்டு வலிகளும் குணமாகும். உடல் நடுக்கம், சோர்வு, கணைய பாதிப்புள்ளவர்களும் இதை பின்பற்றலாம். பெண்கள் தொப்புளில் எண்ணெய் விட்டுக்கொண்டால் கர்ப்பப்பை பலம் பெறுமாம்.

வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் 3 சொட்டு வைத்தால், கண்வலி, சரும வறட்சி, சரும வியாதிகள் தீரும்.. நச்சுக்களும், தொற்றுகளும் அண்டாது. பாதாம் எண்ணெய் பயன்படுத்தும்போது, சருமம் சுருக்கம் மறையும்.

வயிறுவலி: பெண்கள் மாதவிலக்கு நேரத்தில், தொப்புளின் மீது, 2 துளி ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை விடலாம்.. இது வயிற்றுவலியை ஆற்றிவிடும். வலி அதிகமாக இருந்தால், தொப்புளின் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி லேசாக மசாஜ் செய்யலாம்.. கருச்சிதைவு இருக்கும் பெண்கள், ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக் கொள்ளலாம்.

இந்த எண்ணெய் விடுவதால், தொப்புளில் உள்ள தொற்றுகளும் நீங்குகிறது.. ஏனென்றால், அதிகமான பாக்டீரியாக்கள், தொப்புளில்தான் சேர்ந்துவிடுமாம். வியர்வை உள்ளிட்ட பல்வேறு பாக்டீரியா பெருகவும் காரணமாகிவிடுகிறது. அதேபோல வேப்ப எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய்: எனவே, இதனை விரட்டியடிக்க தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் தடவி வருவதால், தொற்று இருந்தாலும் அதை விரட்டியடிக்கிறது.. அதேபோல் நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பு நீரில் குழைத்து, 2 டீஸ்பூன் எடுத்து லேசாக சூடேற்றி தொப்புளில் வைத்து லேசாக மசாஜ் செய்தால், தொற்று இருந்தாலும் பறந்துவிடும்.. வலி இருந்தாலும் பறந்துவிடும்.

நோய்க்கிருமிகள்: அதேபோல, புதினா எண்ணெய்யையும் தொப்புளுக்கு தடவி வரலாம். நோய்க்கிருமிகளை தடுக்கும் ஆற்றல் இந்த புதினா எண்ணெய்க்கு நிறைய இருக்கிறதாம். அதேபோல, நீரில் சிறிது உப்பு சேர்த்து தொப்புளை கழுவிவிடலாம். ஏனென்றால், உப்புக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு. வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கரைத்து, தொற்று பாதிப்புள்ள பகுதியில் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை பற்று போல போட்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்குமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+