ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? சர்க்கரை நோயாளி ACயில் இருந்தால், இதை மட்டும் கவனியுங்க.. பயனுள்ள டிப்ஸ்
சென்னை: ஏசியை இரவெல்லாம் பயன்படுத்துவது நல்லதா? இதனால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? ஏசியில் சர்க்கரை நோயாளிகள் அதிக நேரம் இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டும்.. எனவே, ஏசியின் வெப்பநிலை சுமார் 72-75 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்படி வைத்து கொண்டால் போதும். வெப்ப நிலை 22 சென்டிகிரேட்டுக்கு கீழே போகக்கூடாது.

சுவாச கோளாறுகள்: அத்துடன், அடிக்கடி ACயை சர்வீஸ் செய்தே பயன்படுத்தும்போது, சுவாச கோளாறுகளையும் அண்டவிடாமல் தடுக்கலாம்.. ஒழுங்காக பராமரிக்காவிட்டால், மாசு காற்று, அதே ரூமில் பரவி சுவாசக்கோளாறை ஏற்படுத்திவிடும்... முக்கியமாக ACயின் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதிலிருக்கும், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்கிருமிகள் சேர்ந்து, உடல்நலக்குறைவை ஏற்படுத்திவிடும்.
ACயிலிருந்து வெளிவரும் ஜில் காற்றானது, நமது சுவாசப்பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற உபாதைகளையும் தந்துவிடுவதுடன், உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும்..
எதிர்ப்பு சக்தி: உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தால், தொற்றுகள் நம்மை எளிதில் நெருங்கிவிடும்.. சுவாச பாதையில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கமும் ஏற்பட்டு, உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் வெகுவாக குறைந்துவிடும்.
எனவே, எந்நேரமும் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.. அதிலும், ஆஸ்துமா, அலர்ஜி தொந்தரவு உடையவர்கள் ஏசியை பயன்படுதுவதை குறைத்து கொள்ளலாம்..
ஏனென்றால், ஏசியிலிருந்து வெளியே வரும் காற்று, சருமத்திற்கு நல்லதில்லை. அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சரும வறட்சியை அதிகமாக உண்டாக்கிவிடும்... இந்த குளிர்காற்று, கண்களுக்கும் ஆரோக்கியம் கிடையாது.. கண்களின் ஈரப்பதம் வற்றி, உலந்துவிடும். எரிச்சலை தருவதுடன், கண் அரிப்பு, மங்கலான பார்வை, கண் தொற்று, கண் சிவந்து போதல், என பல சிக்கல்களை கொண்டுவந்துவிடும். இதனால் கண்களில் அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, கண் வலி, கண் சிவத்தல், கண் தொற்று போன்றவைகளையும் கொண்டுவந்துவிடுகிறது.
முழங்கால் பாதிப்பு: அதேபோல, ஏசி காற்று உடலில் பட்டால், மூட்டு வலி, முழங்கால் பாதிப்புகளும் ஏற்படலாம். காரணம், அதிக நேரம் குளிர்ந்த வெப்பநிலையில் தங்க நேரிடும்போது, தசைகள் சுருங்குவதும், இறுக்கமாவதும் ஏற்படுகிறது. இது தசை விறைப்பு மற்றும் மூட்டு வலியை தந்துவிடும். அதனால், ஏசியை தவிர்க்கலாம்.. ஒருவேளை ஏசியில் படுக்க நேர்ந்தால், உடலை போர்வையால் போர்த்திக்கொண்டு படுக்கும்போது மூட்டு பாதிப்புகள் குறையும்..
அதேபோல, ஏசியிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிறைய தண்ணீர் குடித்து கொண்டேயிருக்க வேண்டும். உதடுகள் வறட்சி அடையக்கூடாது.. உதடு, சருமம் வறட்சியடையாதவாறு, கிரீம்கள், மாய்ஸ்ச்சரைசர்களை பயன்படுத்த வேண்டும். தோல், முடி, மூக்கு மற்றும் தொண்டை போன்ற உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி காற்று உறிஞ்சி விடுவதால், எதிர்காலத்தில் இவைகளே உங்களை பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
சளி தொந்தரவு: இந்த நீர் வறட்சியானது, சளி போன்ற தொந்தரவை ஏற்படுத்துகிறது. இது நாளடைவில் மூளை சவ்வைவும் பாதிக்க தொடங்கும். ஏசி காற்றானது தலைமுடியையும் பாதிக்கிறது.. முடி அதிக வறட்சியை ஏற்படுத்தி, உச்சந்தலையையே பலவீனப்படுத்துகிறது.. இதனால் முடி உதிர்வது எளிதாக நடக்கிறது.. ஏசி காற்றானது, முடியிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, முடி வளரும் துளைகளையும் அடைக்க தொடங்குகிறது.
அதுமட்டுமல்ல, ஏசியில் நீண்ட நேரம் இருக்கும்போது, உங்கள் உடல் இயற்கையாகவே எந்தவொரு பாக்டீரியா அல்லது வைரஸையும் எதிர்த்து போராடும் திறனை இழந்துவிடும்.. அதனால்தான், அடிக்கடி சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடுகிறது..
சூரியக்கதிர்கள்: ஏசியை இரவெல்லாம் ஓடவிட்டு தூங்கினால், சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டு தூக்கத்திற்கும் பாதிப்பு வந்துவிடும். நம்முடைய உடலுக்கு வைட்டமின் D அத்தியாவசிய தேவையாகும்.. இது சூரியக்கதிர்கள் மூலம் எளிதில் உடலுக்கு கிடைக்கிறது.. எனவே, எவ்வளவுதான் ஏசியை பயன்படுத்தினாலும், 20 நிமிட வெயிலில் நிற்பது அவசியம்.












Click it and Unblock the Notifications