பிரிட்ஜை விடுங்க! இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சென்னை: இட்லி மாவு அல்லது தோசை மாவு புளித்துவிட்டால் தூக்கி கொட்டிவிடுகிறீர்களா இனி அந்த தவறை செய்யாதீர்கள். என்னதான் அந்த புளித்த மாவுக்கு ஏற்ப காரசாரமான சட்னி அரைத்தாலும் அந்த புளிப்பு சுவை என்பது வெளிப்படத்தான் செய்யும். இதனால் வேறு வழியில்லாமல் அந்த மாவை அப்புறப்படுத்தும் நிலை உள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்களால் எளிமையான காலை, இரவு உணவுகள் என்றால் அது இட்லி, தோசைதான். வார இறுதி நாட்களில் பெரும்பாலான வீடுகளில் மாவு அரைத்தல் நடைபெறும். என்னதான் மாவை அரைத்து பிரிட்ஜில் வைத்தாலும் அது கடைசி 3 நாட்களில் புளிக்கத்தான் செய்யும்.

அந்த மாவை தோசையாக சுட்டு பார்த்தாலும் புளிப்பு சுவை காதை கூசவைக்கும். இதனால் சிலர் மாவில் வெங்காயத்தை கலந்து தோசை ஊற்றி பார்ப்பார்கள். ஆனால் அதுவும் புளிக்கத்தான் செய்யும்.
இதனால் இனி இது வேலைக்கு ஆகாது என கருதி, அந்த மாவை கொட்டி விடுவார்கள். சிலர் நன்றாக கரைத்து செடிகளுக்கும் கொட்டுவார்கள். இந்த நிலையில் புளித்த மாவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். இதில் சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்துங்கள்.
இட்லி மாவு புளிக்க ஆரம்பித்தால் இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து புளித்த மாவில் சேர்க்கவும். இப்படி செய்தால் மாவு புளிக்கும் தன்மை குறைகிறது. தோசை மாவிற்கும் இந்த டிப்ஸை பயன்படுத்தலாம். அது போல் புளித்த இட்லி, தோசை மாவை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். இதனால் புளிப்பு சுவை குறைந்து மாவின் சுவை அதிகரிக்கும்.
இட்லி மாவு புளித்துவிட்டதாக தோன்றினால் இந்த முறை அந்த முறையுடன் சிறிது அரிசி மாவை சேர்க்கவும். இப்படி செய்வதால் புளிப்பு தன்மை குறைகிறது. அரைத்த மாவில் அரிசி மாவை சேர்ப்பதால் சுவை குறையும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி செய்வதன் மூலம் இட்லி சாப்ட்டாகவும் இருக்கும்.
புதிய இட்லி, தோசை மாவு இருந்தால் புளித்த மாவில் இதை சேர்த்தாலும் இட்லி மாவு புளிக்காமல் இருக்கும். இனி மாவு வீணாகாமல் இருக்க என்ன செய்யலாம் தெரியுமா. மாவை அரைக்கும் போது கிரைண்டரோ மிக்ஸியோ சூடாகாமல் ஐஸ்கட்டி போட்டு அரைக்க வேண்டும். அது போல் குளிர்காலத்தில் எவ்வளவு மணி நேரம் ஆனாலும் கூட மாவு புளிக்காது.
பிரிட்ஜில் இருந்து மாவை வெளியே எடுத்து தேவையான அளவை பயன்படுத்திக் கொண்டு மீதத்தை மீண்டும் பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். உளுந்தை அதிகமாக பயன்படுத்தினாலும் மாவு புளிக்க வாய்ப்புள்ளது. அதுபோல் வெந்தயத்தை பயன்படுத்தும் போது குறைவாகவே பயன்படுத்துங்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications