திரிபலா சூரணம் மருத்துவம்.. உடல் எடை குறைக்க இந்த 3 பொருளை தொட வேண்டாம்.. குட் ரிசல்ட தரும் குக்குலு
சென்னை: உடல் எடை குறைய வேண்டுமானால், பச்சை காய்கறிகளும், பழங்களும், போதுமான உடற்பயிற்சியும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயமாகும். எனினும், உடல் எடையை குறைப்பதற்காக எளிமையான டிப்ஸ்களை வீட்டில் முயற்சிக்கலாம்.. அதேபோல, நிறைய ஆயுர்வேத மூலிகைகளும் உதவுகின்றன. இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் முதலில் தவிர்க்க வேண்டியது உப்பு, மைதா, சர்க்கரை. இவைகளை சமையலில் தவிர்த்தாலே வெயிட்டை குறைப்பது எளிது.. இத்துடன, புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த உணவை காலையில் சாப்பிட்டு வந்தால் பெரும்பலன் கிடைக்கும்.

புரோட்டீன் நிறைந்த காலை உணவு
இதில் புரோட்டீன் என்றால், முட்டை, தயிர், பருப்புகள் காலை உணவில் இருக்க வேண்டும். சமையலில் பூண்டு, புதினா, மிளகு, இஞ்சியை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவைகளை வைத்தே தினம் ஒரு துவையல் அல்லது சட்னி செய்து சாப்பிடலாம்.. உணவு நேரம் போக பசி எடுத்தால், பாப்கார்ன் சாப்பிடலாம். ஏனென்றால், நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருக்கும் உணவு இதுவாகும். எப்போது சாப்பிட்டு முடித்தாலும், கிரீன் டீ 1 கப் குடித்து கொள்ளலாம்.
தண்ணீர் மருந்து
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தண்ணீரின் பங்கு அவசியம்.. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீருக்கு பதில், வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து 20 நாட்களுக்கு குடிக்கலாம். இதனால், தொப்பை குறையும்..
மதிய நேரத்தில், மோர், புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் அரைத்து சேர்த்து குடிக்கலாம். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த லவங்கப்பட்டையை பவுடர் செய்து, நீரில கலந்து குடிக்கலாம். இரவில் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் முழுக்க அந்த நீரை குடிக்கலாம்.
குக்குலு + குடம்புளி + திரிபலா சூரணம்
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் குக்குலுவை பயன்படுத்தலாம். கீல்வாதத்திற்கு சிகிச்சைக்கு உதவக்கூடிய குக்குலு , எடை குறைப்பிற்கும் உதவுகிறது. உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பையும் குக்குலு கரைக்கிறது. குக்குலு மாத்திரையாகவும் விற்கப்படுகிறது.
அதேபோல, குடம்புளி தண்ணீரும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த புளியில் சமைத்து சாப்பிடும்போது, தொப்பை, கொழுப்புகள் கரைய துவங்கும். அல்லது ஒரு கிளாஸ் நீரில் சிறிது குடம் புளியை முதல்நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் குடித்து வந்தாலே, கொழுப்புகள் கரையுமாம்.
திரிபலா சூரணம் உடல் எடையை குறைக்கும் முக்கிய பொருளாகும்.. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என 3 வகையான காய்களை சமஅளவு சேர்த்து அரைத்த பவுடர் இது.. நாட்டு மருந்து கடைகளில் இதனை வாங்கி, இரவு தூங்கும் முன்பு, ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் பவுடரை கலக்கிவைத்துவிட்டு, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications