செரிமானக் கோளாறுகளை சரி செய்யும் மஞ்சள்.. பக்கவிளைவு எதுவும் இல்லாத மருந்து.. அசத்தும் ஆய்வு முடிவு
சென்னை: திரும்பத் திரும்ப ஏற்படும் செரிமானக் கோளாறுகளை சீர்செய்வதில் ஆங்கில மருந்துகளுக்கு இணையாக மஞ்சள்(குர்குமின்)வேலை செய்கிறது என பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் பத்திரிக்கை ஆய்வு முடிவு உறுதிபடுத்தியுள்ளது. நமது முன்னோர்கள் மருத்துவ அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு,மஞ்சளும்,நெல்லிக்கனியும் உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் வீ. புகழேந்தி.
சமீபத்தில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் செரிமானக் கோளாறுகளை சீர்செய்ய மஞ்சள்(குர்குமின்)ஆங்கில மருந்துகளுக்கு இணையாக வேலை செய்கிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருளுக்கு அழற்சிக்கு(Anti-inflammatory)எதிராகவும், கிருமிகளுக்கு எதிராகவும், செரிமானக் கோளாறுகளை சீர்செய்யும் தன்மையும் இருப்பதால்,அது தமிழகத்தில் நெடுங்காலமாக மருந்தாக பயன்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் 2019-21 இடைப்பட்ட காலத்தில் 18-70 வயதினரிடையே,206 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மஞ்சள்(குர்குமின் )நாள்பட்ட செரிமான பிரச்சனைகளை ஆங்கில மருந்துகளுக்கு இணையாக சீர்செய்வது உறுதியாகியுள்ளது.
ஆய்வு 28 நாட்கள் வரை நடந்தது. மொத்தம் 206 பேரை 3 குழுக்களாக பிரித்தனர். 69 பேருக்கு மஞ்சள் மட்டும் 500 மி.கி. வரை ஒரு நாளுக்கு 4 வேளை கொடுக்கப்பட்டது. 68 பேருக்கு அமிலம் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தும் ஒமிப்பிரசோல் 20 மி.கி.எனும் மருந்து கொடுக்கப்பட்டது.
69 பேருக்கு மஞ்சள்+ஒமிப்பிரசோல் ஆகிய 2 மருந்துளும் கொடுக்கப்பட்டது. 206 பேரில் 151 பேர் ஆய்வு முடியும் வரை முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொண்டனர். 28 நாள் ஆய்வு முடிவிற்குப் பின் செரிமான பிரச்சனையில் உள்ள மாற்றத்தை சர்வதேச தரத்தின்(Severity of Dyspepsia Assessment Score-SODA)படி அளவீடு செய்ததில், 28 மற்றும் 56 நாட்கள் கழித்து அனைத்து 3 குழக்களிலும்,வலி+செரிமானத் தன்மையில் நல்ல முன்னேற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
28 நாட்களில் தெரியும் முன்னேற்றத்தை விட 56 நாட்களுக்குப் பின் தெரியும் முன்னேற்றம் கூடுதலாக இருந்தது. இதன் மூலம் மஞ்சள் தனியாக கொடுத்தும் ஆங்கில மருந்துகளுக்கு இணையான முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஒமிப்பிரசோல் மருந்தை நாள்பட எடுக்கும் போது, மினரல் சத்து குறைப்பாடு,அதனால் அதிக எலும்பு முறிவு,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிக கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இத்தகைய பின்விளைவுகள் மஞ்சள் எடுப்பதால் இல்லவே இல்லை. ஆக நாமும் செரிமான பிரச்சனைத் தீர்க்க மஞ்சளை அதிகம் உட்கொண்டு பலன் பெற முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.
அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தது-ஆயுளைக் கூட்ட-அனைவரும் அறிந்த விசயம்.அந்த காலத்தில் அது அஸ்கார்பிக் அமிலம்-வைட்டமின்-சி காரணமாக நிகழ்ந்தது என நமக்கு தெரியாது. பிற்காலத்தில் அது வைட்டமின்-சி யின் செல்களை காக்கும் Anti-oxidant தன்மையால் Free radicle உற்பத்தியாவதைக் குறைப்பதால் செல்கள் காக்கப்படுகின்றன)என ஆய்வுகள் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது.
நமது முன்னோர்கள் மருத்துவ அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு,மஞ்சளும்,நெல்லிக்கனியும் உதாரணம். "ஆலும்,வேலும் பல்லுக்குறுதி" என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு. நமது மரபு மருத்துவத்தை பேணிகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் நல்லது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications