கருவாட்டு ரசத்தின் ஆரோக்கியம்.. கருவாடு சாப்பிட்டால் "அதை" மட்டும் செய்யாதீங்க.. சத்தான கருவாடு எது?
சென்னை: கருவாடுகளிலுள்ள சத்துக்கள் என்ன? கருவாடு ரசம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? நோய்கள் என்னென்ன தீரும்? யாரெல்லாம் கருவாடுகளை சாப்பிடக்கூடாது? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கொழுப்பு சத்து இல்லாத அசைவ உணவு கருவாடுதான்.. கிட்டத்தட்ட 85 சதவீதம் வரை புரோட்டீன் கருவாடுகளில் உள்ளது. ஏராளமான இரும்புச்சத்துக்களும் கருவாடில் உள்ளது. எனவே, கருவாடு சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. ரத்தசோகை பிரச்சனை நெருங்காது..

இறால் கருவாடு
ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், இருமல், சளி உள்ளிட்ட சுவாச கோளாறுகளுக்கு கருவாடு பெஸ்ட் மருந்தாகிறது. நீண்ட நாள் படுக்கையில் கிடந்தவர்கள் பலம் பெற வேண்டுமானால், கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிடலாம்.. வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.. கால்சியம் நிறைந்த கருவாடுகள், எலும்பு பற்களின் உறுதிக்கு பயன்படுகின்றன..
இவைகள் எல்லாமே கருவாடுகளிலுள்ள பொதுவான பயன்கள் ஆகும்.. ஆனால், சில கருவாடுகள் பிரத்யேக மருத்துவ குணங்கள் கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறால் கருவாடை சொல்லலாம். ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்ப்பதில் இந்த கருவாடுக்கு முதன்மையான இடம் உள்ளது. அடுத்து பெண்களுக்கு மருந்தாக உபயோகமாகும் கொடுவா கருவாடுகளை சொல்லலாம். கர்ப்பப்பை பிரச்சனைகள் அத்தனையும் தீர்க்க இந்த ஒரு கருவாடே போதும்.
கர்ப்பிணிகள்
இளந்தாய்மார்களுக்கு அதிகமாக பால் சுரக்க, பால் சுறா கருவாடு , திருக்கைமீன் கருவாடு இரண்டையும் பயன்படுத்தலாம். ஆனால், கர்ப்பிணிகள் கருவாடு சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு வயிற்று அழற்சி, செரிமானமின்மை ஏற்படக்கூடும்.. கர்ப்பகால ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு, இது கூடுதலான அழுத்தத்தை தந்துவிடும். எனவே மருத்துவர்களின் ஆலோசனை கண்டிப்பாக வேண்டும்.
கெளுத்தி, கொடுவா போன்ற கருவாடுகளை குழம்பு வைத்து சாப்பிடும்போது, மந்தம், அஜீரணம், வாயு பிடிப்பு, உப்பசம் பிரச்சனைகள் தீர்க்கின்றன. எனினும், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, கருவாடு உள்ளிட்ட அசைவத்தை தவிர்க்க சொல்வார்கள்.
கருவாட்டு ரசம்
அதேபோல கருவாட்டு ரசம் அனைவருக்குமே பொதுவானது.. மிளகு பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகைகளை சேர்த்து இந்த ரசம் வைப்பார்கள்.. சிலர் இதனை கருவாட்டு சாறு என்றும் சொல்வார்கள். இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி போன்றவைகளுடன் கருவாடு சேர்த்து ரசம் போல வைப்பார்கள். இதை குடித்து வந்தால், அஜீரணம், மந்தம், பசியின்மை, குமட்டல் என அத்தனையும் விலகிவிடும். அந்தவகையில் வாரம் ஒருநாள் கருவாடு குழம்பு சமைத்து சாப்பிடலாம்..
யாரெல்லாம் கருவாடு தவிர்க்கலாம்
சைனஸ், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் உப்பு அதிகமாக சேர்க்கக்கூடாது என்பார்கள். அதனால் கருவாட்டையும் அதிகமாக சேர்க்கக்கூடாது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாடு சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் கருவாடு சாப்பிடக்கூடாது. காரணம், லிஸ்டேரியா எனப்படும் பாக்டீரியா நஞ்சுக்கொடி வழியாக பிள்ளையை சென்றடைந்தால், அது சிக்கலை தந்துவிடுமாம். அது தொற்றையும் ஏற்படுத்தக்கூடும். சருமநோய் அல்லது அலர்ஜி இருப்பவர்களும் கருவாட்டை தவிர்க்கலாம்.. சரும பிரச்சனை இருக்கும்போது, கருவாட்டையும் சாப்பிட்டால், உடலில் நமைச்சல், அரிப்பு அதிகம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications