வல்லாரை கீரை.. மன அழுத்தத்தை போக்கும் பயனுள்ள வல்லாரை இலைகள்.. நினைவாற்றலை பெருக்கும் சூப்பர் பொடி
சென்னை: மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வல்லாரை கீரை, காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது. இதற்கு உதவக்கூடிய வல்லாரை மாத்திரைகளை நாமே வீட்டில் தயாரிக்கலாம். எப்படி தெரியுமா?
நினைவாற்றலை பெருக்கக்கூடிய வல்லாரை கீரையில், நன்மை பயக்கும் சேர்மங்களின் தனித்துவமான கலவை உள்ளன.. பிரம்மோசைடு, பிராமினோசைடு, சென்டெல்லோசைடு போன்றவை நினைவாற்றல், செறிவு, அறிவுத்திறனை பெருக்க உதவுகிறது...

நரம்புகள்: அத்துடன் சிஎன்எஸ்ஸில் உள்ள நரம்பியக்கடத்தியின் செயல்பாட்டையும் இந்த இலை தூண்டுகிறது.. இதன் மூலம் மூளையிலிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு நரம்பு சமிக்ஞைகள் இயல்பான ரிலேவை உறுதி செய்வதுடன், அறிவாற்றல் திறன்களையும் பெருக்க தூண்டுகிறது. வல்லாரை கீரையில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளதால், மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் மருந்தாகவும் உள்ளன..
மற்ற கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்தவை என்றாலும், இந்த வல்லாரை கீரையில் கூடுதலான இரும்பு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. எனவே ரத்தசோகை உள்ளவர்கள் இந்த வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. இதனால் ரத்தமும் சுத்திகரிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை தடுக்கும் சக்தி இந்த வல்லாரைக் கீரைகளுக்கு உள்ளது...
இதய தசை: பொட்டாசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தத்தை பராமரிக்க வல்லாரைகள் உதவுகின்றன. இதய தசையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது..
வல்லாரை இலையிலிருந்து சாறு எடுத்து, அரிசி திப்பிலியை ஊறவைத்து உலர்த்தி தூள்செய்து வைத்துகொள்ளலாம்.. இதில் 4 சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.
மாரடைப்பு: கெட்ட எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் நல்ல எச்டிஎல் கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. மேலும், இந்த மூலிகை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதில் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதன் மூலம் நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளுக்கு பங்களிக்கிறது. வல்லாரை கீரையை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில்லை..
அல்லது பவுடர் தயாரித்தும் பயன்படுத்தலாம்.. வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்து கொண்டால், நாளைக்கு 2 வேளை பாலில் கலந்து குடித்து வரலாம்.. வல்லாரையின் தாதுப்பொருட்கள், தசைப்புண்களையும், தசைப்பிடிப்புகளையும் சரிசெய்கிறது.. நார்ச்சத்து அதிகம் என்பதால், குடல் இயக்கத்தை வலுவாக வைத்திருக்கிறது... சிறுநீரக செயல்பாடும் சீராகிறது..
புத்துணர்ச்சி: அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டாலும் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்... வாய்ப்புண்கள், குடல் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.. அல்லது வல்லாரையுடன் மிளகு, துளசியிலை சம அளவு எடுத்து விழுதாக அரைத்து, சிறு சிறு உண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டும் பயன்படுத்தலாம்.
வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் சீக்கிரத்தில் ஆறும்... 10 கிராம் வல்லாரை பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால மலச்சிக்கல் தீரும்.












Click it and Unblock the Notifications