ஆமா.. வாக்கிங் போறது ஏன் அவ்ளோ முக்கியம் தெரியுமா.. இது தெரியாம போச்சே!
சென்னை: நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்விற்காக நாம் அனைவரும் நடைப்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலை 5-6மணி, கால்களுக்கு நன்கு பொருத்தப்பட்ட ஷூக்கள் (Well fitting Shoe's) சிறந்தது. நடைபயிற்சி செய்வதால் (Communicable diseases) மற்றவர்களிடத்திலிருந்து வரக்கூடிய தொற்று நோய்கள், மற்றும் தொற்றாத (Non-communicable diseases) நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நடைப்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் அல்ல, முழு உடலையும் அதாவது தலை முதல் பாதம் வரை, உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பலப்படுத்துகிறது, மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளும் தரக்கூடியதாகும்.
ஆண்களும் பெண்களும், என எல்லா வயதினரும், குறிப்பாக சிறுவர் சிறுமிகள் தினமும் குறைந்தது 20 நிமிட நடைப்பயற்சி செய்யும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக சில மருத்துவ ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைவருக்கும் உடலை ஆரோக்கியமாகவும், மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்லவும் உதவுகிறது .

காலையில் நடைபயிற்சியின் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்வதோடு, மூளை நரம்பியல் சுற்றுகளைத் தூண்டி, உடலை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. மிக முக்கியமாக நம் உடலில் உள்ள மூட்டுகளை, குறிப்பாக முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளை (Knee and Hip joints) பலப்படுத்த நடைப்பயிற்சி அவசியமாகும். நீண்ட நேர பயணத்தின்போது, கை, கால்களில் ஏற்படும் வலி, வீக்கங்களை குறைக்க கட்டாயம் வழக்கமான (Regular Walking) நடைபயிற்சி வேண்டும். பெரியவர்கள், வயதானவர்கள் மூட்டு வலி அதிகமாக இருந்தால், சாதாரண தரையில் நடைப்பயிற்சி செய்யாமல், மாறாக பச்சை புல் இடங்களில் நடக்கலாம். இவ்வாறு நடப்பதால், கால்களுக்கு இதமாகவும், வலி வீக்கங்களையும் குறைத்திடும்.
தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இதயம் பலப்படவும், தொடர் தும்மல், ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், மற்றும் நுரையீரலுக்கு நல்ல சுத்தமான காற்று சென்று, எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக சுவாசிக்க உதவி புரிகிறது. நடக்கும்போது ரத்தத்தில் உள்ள நச்சுகள் வியர்வை வழியாக வெளியேற்றி, உடல் சூட்டையும் தனியா செய்கிறது. தொடர்ந்து 15 - 20 நடக்கும்போது மூலையில் ஹாப்பி ஹார்மோன் சுரப்பதால் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறைக்கவும்,நாள்பட்ட நோய்களான இரத்த அழுத்தம், பதற்றம், அதிக உடல் எடை, நீரழிவு போன்ற நோய்கள் நடைபயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். நடைப்பயிற்சி ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும்.
நடைபயிற்சிக்கு பிறகு, தேவையற்ற கொழுப்புகள் குறைக்க சீரான மற்றும் சரியான உணவு முறை பின்பற்றுவதும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அளவோடு எடுத்துக் கொள்ளவேண்டும். இரவு நேரத்தில் ஜங்க் உணவை தவிர்க்கவேண்டும். உடல் எடையை குறைக்கக்கூடிய சில உணவுகள், மற்றும் பழ வகைகள் தினசரி பழக வேண்டும். சோயா பாலில் குறைவான கலோரி இருப்பதால் உடல் எடை கூடுவதை தடுக்கும். முளைகட்டிய பச்சை பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலையை சம அளவில் சாப்பிட வேண்டும், கோதுமை சப்பாத்தி, முட்டையின் வெள்ளை கரு, ஆப்பிள், ஆரஞ்சு, செர்ரி போன்ற பழங்கள் சாப்பிடலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications