பேரீச்சம்பழத்தின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும், அதன் மருத்துவ பண்புகளும்!
சென்னை: பேரிச்சை பழம் அதிக இனிப்பு சுவை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும். உலகில் எல்லா நாடுகளிலும் இப்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு, முக்கியமாக ஈரான், அமெரிக்கா, அரபு நாட்டில் ஏராளமான வகைகளும், இந்தியாவிலும் அதிக அளவு சாகுபடியாகிறது. இதன் தனிச்சிறப்பு நல்ல வறட்சியான பகுதிகளிலும் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மரத்திலும் சுமார் 100 - 250 கிலோ பழங்கள் வரை கிடைக்கும் என்பதால், நல்ல லாபம் தரக்கூடியது என்பது இம்மரத்தின் சிறப்பம்சமாகும். இந்தியாவில் ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது.

சத்துக்களும், மருத்துவ பண்புகளும்
இதில் எண்ணற்ற வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ, பி, பி2, பி5, மாவுப் பொருட்கள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை காணபடுகிறது. இதை சாப்பிடும்போது உடனடி சக்தி தரும் ஒரு நல்ல ஊட்ட உணவு ஆகும். தினமும் சாப்பிடுவதால், இரத்த சோகை, குடல் சார்ந்த நோய்கள், வயிறு, செரிமான மண்டலத்தில் உள்ள நுண்கிருமிகள் வெளியேறும், மேலும் நார்சத்து கொண்டதால் சிறந்த மலத்தை இளக்கி, மலசிக்கல் கோளாறுகள் நீங்க, 2-3 பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து வெறும் வியற்றில் தொடர்ந்து குடித்தால் மல சிக்கல் மறையும். காலை மற்றும் மத்திய உணவிற்கு பின் பேரிச்சம்பழம் சாப்பிட்டுவர இரத்த சோகை சீராக்கும். பேரீச்சம்பழத்தில் ஊறவைத்த பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும். தினமும் காலை பேரிச்சம்பழம் சாப்பிட்டுவந்தால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும், இரவில் தூக்கயின்மையை போக்க மிதமான வெண்ணீரில் பேரிச்சம்பழம் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கத்தை வருவிக்கும். இதில் அதிக சக்கரை அளவு கொண்டு இருப்பதால், நீரழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கண்பார்வை, மூட்டுவலி குணமாக
வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படக்கூடிய, மங்கலான கண்பார்வை, மாலைக்கண் நோய் மற்றும் கால்சியம் குறைவால் வரக்கூடிய மூட்டு வலி போன்றவை குணமாக, பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், கண்பார்வை கோளாறுகள், மூட்டு வலி நீங்கும்.
இருபாலினருக்கும் அருமருந்து
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்க, இரவில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் குடித்தால், நல்ல பலன் கிட்டும். மேலும் ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை தேனுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். பொதுவாகவே பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம், இரும்புசத்து மாதவிடாய் காலங்களில், ஏற்படும் அதிக உதிரப்போக்கை ஒழுங்குபடுத்த, இப்பழம் ஒரு மருந்தாகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை தினமும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும் அதிலும் 45-55 வயது உள்ள பெண்களுக்கு மெனோபாஸ்(Menopause) காலகட்டத்தில் கால்சியம் சத்து குறைந்து, கை, கால், மூட்டுகளில் ஏற்படும். வலிகள் நீங்கி, ஆரோக்கியமாக இருக்க, பாலில் பேரீச்சம்பழத்தை கலந்து நன்கு கொதிக்கவைத்து, மிதமான சூட்டில் இப்பாலை பருகிவர, உடல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கு பெரிதும் உதவும். மேலும் முதுமையில் ஏற்படக்கூடிய நினைவாற்றல் இழப்பை சரிசெய்ய, தினமும் 1-2 பழம் சாப்பிடுவரவேண்டும்.

நரம்பு தளர்ச்சி நீங்க
அதிக மனஉளைச்சல், வேலைப்பளு, வெப்பப்பகுதியில் வேலை செய்பவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். இவற்றை சரிசெய்ய, பாலில், பாதாம்பருப்பு, பேரிச்சைப்பழம் சேர்த்து, நன்கு கொதிக்கவைத்து, வாரத்தில் 2 -3 முறை சாப்பிட்டுவந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும். பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்க, பேரிச்சம்பழம், சிறிது முந்திரிப்பருப்பு, தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து சாப்பிட்டால், உடல் நலம் பெறும்.












Click it and Unblock the Notifications