அக்குள் வியர்வை ஓவரா இருக்கா? அக்குளில் வியர்வை நாற்றத்தை போக்க தக்காளி போதுமே.. இதோ சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருக்கு அக்குள் பகுதியில், அதிகமாகவே வியர்க்கும்.. இந்த வியர்வை நாற்றத்தை போக்க எளிமையான வழிகள் என்னென்ன தெரியுமா?

வியர்வை அதிகமாக இருப்பவர்கள் உணவு முறையிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தால், இதற்கு தீர்வு கிடைக்கும்.. முதலில், உணவில், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்கலாம்..

What are the Amazing Home Remedies to treat over Sweaty Armpits and Super tips to remove Armpit Sweat

உணவு முறை: காஃபின் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கலாம்.. காரணம், காஃபின் உங்கள் வியர்வையையும், நரம்பியல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.. அத்துடன், ரத்த அழுத்தம், இதய துடிப்பையும், உடல் வெப்பநிலையையும் அதிகரிக்க செய்கிறது.. அதேபோல, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானங்களையும் தவிர்க்க வேண்டும்..

கொழுப்பு உணவுகள், காரசாரமான உணவுகள், ஐஸ் கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம். இவைகளுக்கு பதிலாக, கால்சியம் நிறைந்த பால், சீஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

பழ வகைகள்: பாதாம் பருப்பு, வாழைப்பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு வியர்வைகள் அதிகரிப்பதில்லை.. மேலும், நீர்க்காய்களையும், தர்பூசணி, திராட்சை, முலாம் பழம் போன்ற பழங்களையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஓட்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிரக்கோலி, கீரைகள், காலிஃப்ளவர், கத்தரிக்காய் போன்றவைகளும் வியர்வை சுரப்பை கட்டுப்படுத்தும்.

அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால், அக்குள் முடிகளை கட்டாயம் நீக்க வேண்டும். இது அதிகப்படியாக வியர்ப்பதையும், வியர்வை நாற்றத்தையும் ஓரளவு குறைக்கும்..

துர்நாற்றம்: அதேபோல, குளித்து முடித்ததுமே, உடனே ஆடைகளை அணிந்துகொள்ளாமல், சற்று நேரம் கழித்து அணியலாம்.. அடிக்கடி முகம், கை, கால்களை கழுவிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளால் அதிக வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

சித்த மருத்துவத்தில் அதிக வியர்வை மற்றும் வியர்வை நாற்றத்துக்கு தீர்வு உண்டு.. குறிப்பாக, திரிபலா சூரண மாத்திரை, அமுக்கரா சூரண மாத்திரை, குங்குமப்பூ மாத்திரை போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால், சித்த மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இதனை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளிக்க பவுடர்: அதேபோல, உடலில் தேய்த்து குளிக்க பவுடர் ஒன்றை நாமே வீட்டில் தயாரிக்கலாம்.. திரிபலா சூரணம், கார்போக அரிசி, ரோஜாமொக்கு, கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, ஆவாரம்பூ, கருஞ்சீரகம், கசகசா, சந்தனத் தூள், பாசிப் பயறு, வெந்தயம், எலுமிச்சம்பழத் தோல், மருதாணி போன்றவைகளை எல்லாம் அரைத்து வைத்து கொண்டால் போதும். இந்த குளியல் பொடியை பயன்படுத்தி தினமும் 2 வேளை குளித்து வந்தாலும் துர்நாற்றம் அடிக்காது.

அதேபோல, தினமும் குளிக்கும்போது, தண்ணீருடன் எழுமிச்சம் சாறு சேர்த்து, அரை மணிநேரத்தில் குளித்தால கிருமிகள் அழிந்து துர்நாற்றமும் அடிக்காது. சந்தன கட்டையை, தண்ணீரில் குழைத்து அக்குளில் இரவு தூங்கும் போது தினமும் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்..

கற்றாழை: அல்லது தினமும் குளிப்பதற்கு முன்பு, தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்தும் குளிக்கலாம். அதேபோல கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கலாம்.. அல்லது தக்காளியை மிக்ஸியில் அரைத்து, அக்குளில் தடவி அரை மணிநேரம் கழித்து குளிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+