இந்த 4 உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடாதீர்கள்! மீறினால் மூச்சுத்திணறல் ஏற்பட கூடும்!
சென்னை: இந்த 4 உணவுகளை உங்கள் சிறிய குழந்தைகளுக்கு கொடுப்பதை நிறுத்திவிடுங்கள். இவற்றின் மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு நேரிடலாம். எனவே பெற்றோர்களே உஷாராக இருத்தல் நல்லது.
இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் என்பவர் கூறியிருப்பதாவது: கடை பல்லானது குழந்தைகளுக்கு 3 வயதுக்கு மேல்தான் வரும். அதுவரை குழந்தைகளால் இறைச்சிகளை மென்று சாப்பிட இயலாமல் உணவுக் குழாயிலோ அல்லது மூச்சுக் குழாயிலோ அடைபட்டு ஆபத்து ஏற்படலாம்.

சீஸ் துண்டுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. பார்ப்பதற்கு இவை மென்மையாக இருப்பதை போல் தோன்றலாம். ஆனால் இவை திடமாக இருப்பதால் உணவுக் குழாயில் அடைபட வாய்ப்புகள் அதிகம்.
திராட்சை பழங்களையும் கொடுக்கவே கூடாது. எப்போதும் திராட்சையை சிறிது சிறிதாக வெட்டிய பின்னரே கொடுக்க வேண்டும். திராட்சையின் தோல் எளிதாக குழந்தையின் உணவுக் குழாயினுள் அடைத்துக் கொள்ளும்.
அது போல் பாப்கார்ன்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. மேற்கண்ட 3 உணவுகளை விட பாப்கார்ன்தான் மிக எளிதாக உணவு குழாயில் அடைபட்டு ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு குழந்தையின் இருமலில் உருவாகும் காற்றின் அழுத்தம் கூட மிகவும் குறைவு.
எனவே குழந்தைகளுக்கு தொண்டை பகுதியில் உணவு சிக்கினால் கூட அது ஆபத்துதான். பல குழந்தைகள் இதனால் இறக்கிறார்கள். பெற்றோர் இதில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார். எனவே குழந்தைகளுக்கு இது போன்ற உணவு பொருட்களை கொடுக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் அவர்களுக்கு கடை பல் வளரும் வரை என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 6 மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற உணவுகளை கொடுக்கலாம். அதற்காக கடையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பவுடரை வாங்கிக் கலக்கி கொடுக்கக் கூடாது.
வீட்டிலேயே செய்யப்பட்ட ராகி கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி உள்ளிட்டவைகளை கொடுக்கலாம். பிறகு மாதம் ஏற ஏற மருத்துவர்கள் சொல்லும் உணவுகளான வாழைப்பழம், குழைந்த சாதம், பருப்பு உள்ளிட்டவைகளை கொடுக்கலாம். பிறகுதான் ஒரு வயதில் காய்களை நன்றாக மசித்து சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்.
முட்டை சாப்பிடுவோர், வேக வைத்த முட்டையை கொடுக்கலாம். இதுதவிர ஆப்பிள் துண்டுகள், கேரட்டுகள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளை கொடுக்கலாம். எனவே எப்போதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்து கொடுத்தால் நலம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications