முகத்திற்கு மஞ்சள் பூச போறீங்களா? தயிர் சேர்க்கறீங்களா! தயவு செய்து "இதை" மட்டும் செய்யாதீங்க!
சென்னை: முகத்திற்கு மஞ்சள் பூசினால் முகப்பரு உள்ளிட்டவை வராது. ஆனால் முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கும் போது யாரும் இந்த தவறை செய்யாதீர்கள்.
மஞ்சள் மங்களகரமானது என்பதை காட்டிலும் மருத்துவ குணங்கள் கொண்ட நல்லதொரு பொருள். இது முகத்திற்கு அழகை கொடுக்கும், கிருமிநாசினியாக இருக்கும். முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.

இந்த மஞ்சளில் இருக்கும் குர்குமின் எனும் ஒரு பொருள்தான் மருத்துவ குணத்தை கொடுக்கிறது. மஞ்சளை சமையலில் சேர்த்து வரும் போது அது பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக அசைவம் சமைக்கும் போது மஞ்சள் போட்டுதான் கழுவுகிறார்கள்.
இதனால் மஞ்சள் கிருமிநாசினியாக செயல்பட்டு அந்த இறைச்சியில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும். மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. அத்துடன் உடலில் உள்ள பல பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தோஷங்களை நீக்கும்.
கல்லீரலை சுத்திகரிக்க மஞ்சள் உதவுகிறது. இந்த மஞ்சளானது செரிமானத்தை சிறப்பாக இயங்க வைக்கிறது. மஞ்சள் கலந்த பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அது போல் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, வயிற்றுப்போக்கை சரி செய்யும். தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் தரும்.
அந்த காலத்தில் மாட்டு சாணத்திலும் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரிலும் வாசல் தெளித்து கோலமிடுவார்கள். இது லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். மழைக்காலங்களில் குளிரையும் காய்ச்சலையும் இந்த மஞ்சள் விரட்டுகிறது.
மூட்டுவலிக்கு இது நல்லதொரு மருந்தாக அமையும். மஞ்சள தண்ணீருடன் கலந்து ககுடித்தால் அது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மெட்டாபாலிசத்தை அதிகரித்து எடை இழப்பை பெற உதவுகிறது. மஞ்சளை முகத்திற்கு பூசுவதால் செல் சேதத்தை குறைக்கிறது. முகம் பளபளப்பாக இருக்க வைக்கிறது.
வயதான தோற்றம் இல்லாமல் இருக்கும். முகப்பருக்கள், வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சோரியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு கூட மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவடையும். மஞ்சளுடன் தயிர், லெமன், ஆப்பிள் வினிகர் சேர்ப்பது நல்லது.
தயிருடன் மஞ்சளை சேர்த்தால் முகம் பொலிவை பெறும். அது போல் ரோஸ் வாட்டருடன் மஞ்சளை கலந்து முகத்திற்கு தேய்த்தால் குளிர்ச்சியாக இருக்கும். சந்தனத்துடன் மஞ்சளை பூசினால் முகம் நிறம் மாறாமல் இருக்க உதவும். மஞ்சள் பூசி குளித்தால் இத்தனை நன்மைகள் இருக்கின்றன. ஆனால் சிலர் மஞ்சள் போட்டு குளித்துவிட்டு அந்த நிறம் முகத்தில் தெரியும் என்பதற்காக சோப்பு போட்டு கழுவிவிடுவர்.
அது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள். முகத்திற்கு மஞ்சள் தேய்த்தால் நல்ல பலன்களை தரும். ஆனால் அதை போட்டுவிட்டு சோப்பை போட்டால் எப்படி? இயற்கையானதை போட்டு விட்டு ரசாயனம் கலந்த ஒரு சோப்பை போடும் போது மஞ்சளை நாம் எதற்காக போட்டோமோ அந்த பலனை அடைய முடியாது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications