குழந்தைகளுக்கு வீசிங் எதனால் வருகிறது...எப்படி சரி செய்வது?
சென்னை: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொள்ளக்கூடிய உடல் நல பதிப்புகளில் ஒன்று மூச்சுத்திணறல் (wheezing) தொந்தரவு ஆகும். நம்முடைய சுவாசக்குழல்கள் மூலமாய் மூச்சு காற்றை நுரையீரலுக்கு கொண்டுசெல்லும் குழாய்களில் பாதிப்பு உண்டாகி, உட்பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. அதிக சளி, சுற்றுசூழலில் அதிக தூசு, மழையில் நனைவது ஆகிய காரணத்தினால், மூச்சுத்திணறல் வருகிறது. சமீபகாலமாக அனைத்து வயதினருக்கும் இப்பிரச்சனை இருப்பது என்பது சர்வசாதாரணமாயிற்று. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி அதிகமாகும்போது மூச்சுத்திணறல் ஏற்படும் நேரத்தில் நெபுலைசர் (Neubuzilizer) வைத்து சரி செய்து இயல்பானதே.

குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: சளி அடிக்கடி பிடிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் (wheezing) வருவதற்கு முக்கிய காரணம் சுற்றுப்புற சுழல்நிலை, உணவு முறைகள், சளி பிடிப்பதற்கு அதிகமான இனிப்பு வகையான சாக்லேட் உட்கொள்வது, தினமும் அதிக அளவில் பால் குடிப்பது மற்றும் இரவிலும் பால் குடிப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது. கால்சியம் தேவையுள்ள குழந்தைகளுக்கு பாலில் தண்ணீர் சேர்த்து நீர்த்தபாலாகவும், அதில் சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்தும் கொடுப்பது மிகவும் நல்லது. பாலில் சற்று அதிகமான தண்ணீர் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு கபத்தை உண்டாக்குவதை தவிர்க்கும். நீர்காய்கறிகள் சொரைக்காய், பூசணிக்காய், தர்பூசிணி, வெள்ளரி, சௌ சௌ, ஆகிய காய் வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மலசிக்கல் வராமல் தவிர்க்க: குழந்தைகள் சரியாக மலம் கழிக்கவில்லை என்றாலும் இப்பிரச்சனை ஏற்படும். இரவு வாழைப்பழம் கொடுப்பதை பார்க்கிலும், காலை உணவுக்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிடக்கொடுத்த பிறகு உணவு உடகொள்வது குழந்தைகளுக்கு செரிமான மண்டலத்தை சரிசெய்து, மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும். 1-3 வயது குழந்தைகளுக்கு சிறிது உலர்திராட்சை வெந்நீரில் ஊறவைத்து, மாலையில் அந்த தண்ணீரை குடிக்க செய்துவந்தால், மலசிக்கல் வராமல் தடுக்கும். நார்சத்து உள்ள உணவுகள், கீரை வகைகள், போன்ற உணவுகளை பழகிவந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நெஞ்சு சளி கரைய வீட்டு கஷாயம்: குழந்தைகளுக்கு நெஞ்சு சளி கரைய மிளகு கஷாயம், கற்பூரவள்ளி கஷாயம், தேன், ஆகிய கஷாயங்களை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். 5-6 மிளகு இடித்து தண்ணீரில் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில் தேன் கலந்து கொடுக்கலாம். 2-3 கற்பூரவள்ளி இலை, சிறிது மிளகு நசுக்கி சாரை எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம், அல்லது, கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்கலாம். தூதுவளை கீரை ரசம் போல் செய்து கொடுக்கலாம். இந்த வீட்டு வைத்தியங்களில் ஏதேனுமொன்றை வாரத்தில் 1 முறை செய்து தொடர்ச்சியாக கொடுத்துவந்தால், நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்ய உதவும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை பழக்கப்படுத்துவது, அவர்களின் எதிர்காலத்தில் நல்ல அரோக்கியத்துடன் வாழலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications