கருத்தடை சாதனமான காப்பர் டி-யால் பெண்களின் உடல் எடை கூடுமா? கரு உருவாகுமா?
சென்னை: குழந்தை பிறப்பை தடுக்க பயன்படுத்தும் காப்பர் டி சாதனங்களால் பெண்களின் எடை கூடுமா, என்னென்ன பக்க விளைவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் காப்பர் டி என்றால் என்ன, அது கர்ப்பத்தை எப்படி தடுக்கிறது?
டி வடிவில் இருக்கும் இந்த கருவியானது தம்பதிகளின் வாழ்வில் ஒரு கட்டத்தில் கருத்தடையை ஏற்படுத்தும். இந்த கருத்தடை விவகாரத்தில் 3 பிரிவினர் உள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் திருமணம் ஆனதும் குழந்தை பெற விரும்ப மாட்டார்கள். பொருளாதார சூழல், படிப்பு, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளி போட சிலர் விரும்புவார்கள்.

பொதுவாக இது தவறான முன்னுதாரணம் ஆகும். காலத்தே பயிர் செய் என்பதை போல் காலாகாலத்தில் அது அது நடக்க வேண்டும். மேலும் முதல் குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்கு குறைந்தது 3 ஆண்டுகளாவது இடைவெளி விட வேண்டும் என சிலர் கருதுவார்கள்.
சில பெண்களுக்கு குழந்தை பிறப்பு முடிந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வர்கள். அவற்றை செய்ய மறந்துவிட்டால் தற்காலிக கருத்தடையை தேர்வு செய்வார்கள். இப்படிப்பட்ட 3 தரப்பினருக்கு பயன்படுவதுதான் காப்பர் டி எனப்படும் சாதனம் ஆகும். இது டி வடிவத்தில் காணப்படும்.
இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டியை வெளியே எடுக்க உதவுகிறது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்படும் போது பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.
அதாவது ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை இந்த சாதனம் செய்கிறது. இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த சாதனத்திற்கென சில காலக்கெடுக்கள் உள்ளன. அதாவது 1 ஆண்டு, 4 ஆண்டுகள், என இருக்கும். அப்படியென்றால் உள்ளே பொருத்தும் காப்பர் டியை ஓராண்டுக்கு ஒரு முறை , 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
இது போன்ற காப்பர் டியை அணிய சில பெண்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கர்ப்பப்பையில் அணியும் போது மாதவிடாய் பிரச்சினையை ஏற்படுத்துமா, உடல் எடை கூட்டுமா, கரு உருவாகிவிடுமா போன்ற சந்தேகங்கள் உள்ளன.
இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குழந்தை பிறப்பை தடுக்க பயன்படுத்தப்படும் காப்பர் டி எனப்படும் சாதனங்கள் பாதுகாப்பானதா, பெண்களின் எடையை அதிகரித்து ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகங்கள் பெண்களுக்கு உண்டு.
காப்பர் டி என்ற கருத்தடை சாதனம் பெண்களின் கர்ப்பப்பையில் வைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் காப்பர் காயில் அதாவது செம்பு உலோகமானது விந்தணுவின் மைட்டோகான்டிரிய செயல்பாட்டை பாதித்து அதன் வேகத்தை குறைத்து அந்த பெண் கருத்தரிக்காமல் தடுக்கிறது.
எனவே இந்த கருத்தடை சாதனத்தை தன்னுள் வைத்துக் கொண்ட ஒரு பெண், உடலுறவு முடிந்த பிறகு எந்த கருத்தடை மாத்திரையும் எடுக்கத் தேவையில்லை. அது போல் அந்த பெண்ணின் கணவரும் ஆணுறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேவையில்லாத வேளையில் கர்ப்பத்தை தவிர்ப்பதற்கு இது ஒரு சிறந்த கருவி. இதனை கர்ப்பப்பையில் பொருத்துவதற்கோ இல்லை அகற்றுவதற்கோ உங்கள் மருத்துவர் எடுத்துக் கொள்ள போகும் கால அவகாசம் ஓரிரு நிமிடங்கள்தான்.
வருடக்கணக்கில் ஒரு பெண் இதை கர்ப்பப்பையில் வைத்துக் கொண்ட உடல் எடை அதிகரிப்பு போன்ற எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஆனால் அதிக ரத்த போக்கு, ஃபைப்ராய்டுகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளவர்கள் இந்த காப்பர் டியை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications