பெண்ணுறுப்பில் பயங்கர வலி.. ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே இருந்த ஊசி.. இது எப்படி சாத்தியம்! ஷாக்
பாங்காக்: தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த பல ஆண்டுகளாகப் பெண்ணுறுப்பு மற்றும் வயிற்று பகுதியில் கடுமையான வலி இருந்துள்ளது. இதற்கிடையே மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்குக் கடந்த 18 ஆண்டுகளாகப் பெண் உறுப்பில் கடுமையான வலி இருந்துள்ளது. பெண் உறுப்பு மட்டுமின்றி வயிற்றின் கீழ் பகுதியிலும் வலி இருந்துள்ளது.

முதலில் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் வலி அதிகரித்த நிலையில், அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் அவரது பெண் உறுப்பில் ஊசி இருந்தது எக்ஸ்ரேவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன நடந்தது: கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கருவுற்று இருக்கிறார். அப்போது பிரசவம் பார்த்த செவிலியர் ஒருவர், பிரசவத்திற்குப் பிறகு தையல் போடும் போது தவறுதலாகப் பெண்ணுறுப்பில் ஊசியைச் சிக்கவைத்து இருக்கிறார். ஆபரேஷன் செய்த மருத்துவர் அப்போதே இதைப் பார்த்துள்ளார். தனது விரலை வைத்து அந்த ஊசியை எடுக்க முயன்றுள்ளார். இருப்பினும், ஊசியை அவரால் எடுக்க முடியவில்லை.
தையல் போடுவதில் தாமதம் ஏற்பட்டால் ரத்த இழப்பு ஏற்பட்டு அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் ஊசியை அப்படியே விட்டுவிட்டு ஆப்ரேஷன் செய்துள்ளார். அந்த ஊசி தான் அந்த பெண்ணுக்கு மிகக் கடுமையான வலியைக் கொடுத்துள்ளது. பெண்ணுறுப்பு மற்றும் அடிவயிற்றில் அந்த பெண்ணுக்குக் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது, அடிக்கடி எரிச்சலும் இருந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், பிசரவம் பார்த்த மருத்துவரிடம் செல்லாமல் வேறு ஒருவரிடம் சென்றதாகத் தெரிகிறது. இதனால் மருத்துவர்களால் என்ன சிக்கல் என்பதையே கண்டறிய முடியவில்லை.
தள்ளிப் போன ஆபரேஷன்: கடந்த ஆண்டுதான் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்ரேஷன் மூலம் அந்த ஊசியை அகற்ற முடிவு செய்துள்ளனர். இருப்பினும், ஊசி நகர்ந்து கொண்டே இருந்ததால், ஆபரேஷன் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அந்த பெண் தொடர்ச்சியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் அந்த பெண்ணுக்குச் செலவும் அதிகரித்தது.
அந்த பெண்ணின் நிலையை அறிந்த பவேனா அறக்கட்டளையின் தலைவர் பாவேனா ஹோங்சாகுல் அவருக்கு உதவ முன்வந்தார். மருத்துவமனை ஒன்றில் அந்த பெண்ணுக்குச் சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்த பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று பவேனா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
விஷமாக மாறும் முட்டை.. வாங்கும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. அப்பறம் ரொம்ப கஷ்டமாகிடும்!
பிரசவம்: அதேநேரம் இப்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துவிட்டதா இல்லையா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. மேலும், அந்த பெண் தனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மீது வழக்குப் போடவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவமனை இது குறித்து எதுவும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.
முன்னதாக கடந்த ஜூன் மாதமும் தாய்லாந்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது கேன்சர் சிகிச்சையின் போது மருத்துவர் காட்டன் பஞ்சை உள்ளே வைத்துவிட்டனர். இதனால் கடுமையான தொற்று ஏற்பட்ட நிலையில், நூலிழையில் அந்த பெண் உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications