வாரந்தோறும் பசலைக்கீரை.. புற்றுநோய் கூட நாலடி தள்ளி நிற்கும்.. எலும்பு பலம், சரும நலனுக்கு பசலை கீரை
சென்னை: உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசலைக் கீரைகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? உடல் எடை குறைப்பவர்கள் பசலைக்கீரையை தேர்வு செய்ய என்ன காரணம்? அந்த அளவுக்கு பசலைக் கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? பசலைக் கீரையை வாரந்தோறும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லக் காரணம் என்ன தெரியுமா? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
கோடை காலம் தற்போது துவங்கிவிட்டதால், பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். காரணம், உஷ்ண கோளாறுகளை இந்த கீரை சரிசெய்கிறது..

வெயில் கால தொந்தரவுகள்
கொப்புளங்கள், வியர்க்குரு , சரும எரிச்சல், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் கடுப்பு, ஆசன வாய் பகுதியில் உண்டாகும் புண், எரிச்சல் என எத்தகையை சூடு உபாதைகளையும போக்கக்கூடியது பசலைக்கீரை. ஏனென்றால், பசலைக்கீரையிலுள்ள லுடின், கண்களுக்கு குளிர்ச்சியை தந்து, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் தடுக்கிறது.
அவ்வளவு ஏன்? தீப்புண், வெந்நீர் காயம், சொறி, சிரங்கு, காயங்கள் ஏற்பட்டாலும், இந்த பசலைக்கீரையை நசுக்கி அவைகளின் மீது தடவிவந்தால் நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையின் தண்டையும் அரைத்து வேர்க்குரு, அல்லது தோல் எரிச்சலுக்கு பற்று போடலாம்.
பசலையில் உள்ள சத்துக்கள்
பாலக்கீரை என்று சொல்லப்படும் பசலைக்கீரையில் வைட்டமின் A, C, K, E, B1, B2, B3, B6, B9, B9, மற்றும் மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.
கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ள பசலைக்கீரை , உடல் எடைக்கு சிறந்த தேர்வாகும்.. இந்த கீரையிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கக்கூடியவை. அதனால்தான் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் தங்குவதில்லை.. உடல் எடை குறைப்பவர்கள் பசலைக்கீரையை தவிர்க்கக்கூடாது..
புற்றுநோய் எதிர்ப்பு
பெண்களை தாக்கும் கொடூர நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. A, C வைட்டமின், ஃபோலிக் சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரைகுள், மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. ப்ளவனாய்டு நிரம்பியிருப்பதால், ஒட்டுமொத்த புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியவை.. ஏகப்பட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால்தான் பெண்களும், இதனை தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.
சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் K சத்துக்களும் நிறைந்துள்ள பசலைக்கீரைகள் பற்கள், எலும்புகளை உறுதி பெற செய்கிறது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரலாம். சூப் போலவும் வைத்து தரலாம்
ரத்த சோகை - மூட்டு வாதம்
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சனை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கான இரும்புச்சத்துக்கள் இந்த கீரையில் உள்ளதால் ரத்த விருத்தியடைவதுடன், தலைமுடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.. வெள்ளைப்படுதல் தொந்தரவு இருப்பவர்கள் பசலை கீரையை சமைத்து சாப்பிடலாம்,
கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தை போக்கும் பசலைக்கீரைகள், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.. உடலிலுள்ள உஷ்ணத்தையும் தணிக்கிறது.. வைட்டமின்கள் நிறைந்த கீரை என்பதால், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications