சென்னை 382: உலகம் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்.. சிறப்பம்சங்கள் என்ன?.. முழு விவரம்!
சென்னை: சென்னை வாங்கப்பட்டு 382 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நவீன சென்னையின் அடையாளமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்த வரலாற்றை பார்ப்போம்.
Recommended Video
விஜயநகர பேரரசிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனி 1639 ஆம் ஆண்டு ஒரு சிறிய நிலத்தை விலைக்கு வாங்கினர். அதற்கு சென்னப்பட்டினம் அல்லது மதராஸபட்டினம் என பெயரிடப்பட்டது. இந்த சிறிய நிலம்தான் இன்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னையாகும். சென்னை வாங்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 22 என்பதால் இதை ஆண்டுதோறும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை உருவாக்கப்பட்டு 382 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட எத்தனையோ கட்டடங்கள் சென்னைக்கு பெருமை சேர்த்திருந்தாலும் கால மாற்றத்திற்கேற்ப நவீனமயமாக்கப்பட்ட பல இடங்கள் சென்னையின் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் சென்னையின் பெருமைகளில் முக்கியமானது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.
உருவானது எப்படி?
இந்த நூலகம் கோட்டூபுரத்தில் 172 கோடி செலவில் அமைந்துள்ளது. இது அண்ணாவின் 102 ஆவது பிறந்ததினத்தையொட்டி 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தின் முகப்பில் அண்ணா அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது போல் 5 அடியில் வெண்கலத்தில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கல்வெட்டில் "வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்கு தரப்பட வேண்டும்" என்ற அண்ணாவின் பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிக பெரிய நூலகங்களில் அது ஒன்று ஆகும். இந்த நூலகம் 8 லட்சம் சதுரடி பரப்பை கொண்டது. தரைதளம் நீங்கலாக 8 தளங்கள் உள்ளன. தற்போது இந்த நூலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த இங்கு 5 லட்சம் புத்தகங்கள் காணப்படுகின்றன. இந்த நூலகத்தில் 12 லட்சம் நூல்களாக அதிகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
யூனெஸ்கோ உலக டிஜிட்டல் நூலகம்
யூனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களையும் கன்னிமாரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது உள்ளது. இவை அனைத்தும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் நூலகத்தில் 1250 பேர் படிக்கலாம். அது போல் 50 ஆயிரம் சதுர அடியில் 1,280 பேர் உட்காரும் ஆடிடோரியம் உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 800 பேரை உள்ளடக்கும் ஆம்பிதியேட்டரும் உண்டு. ஆம்பி தியேட்டர் என்றால் பொழுதுபோக்கிற்கான திறந்தவெளி மைதானம் ஆகும். இங்கு விளையாட்டு போட்டிகள், நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
நூலகத்தில் பிரெய்லி முறை
நூலகம் என்றாலே பார்வைதிறன் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையை இந்த நூலகம் மாற்றியுள்ளது. இங்கு பார்வைதிறனற்றவர்களும் பிரைலி மூலம் படிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனை பெரிய லைப்ரரியில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருக்குமா என்ன, 420 கார்களும் ஆயிரம் பைக்குகளையும் பார்க் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய பார்க்கிங் வசதி உள்ளது. அது போல் இந்த கட்டடத்தில் 33 கேவி சப்ஸ்டேஷன் உள்ளது. 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறிவு பசி போக்க புத்தகங்கள் இருக்கின்றன. அது போல் வயிற்று பசி போக்க ஃபுட் கோர்ட் உள்ளது. சென்னைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இந்த நூலகத்தை பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.
எந்தெந்த தளத்தில் என்னென்ன இருக்கிறது
தரை தளம் (அ பிரிவு)- இங்கு பிரெய்லி முறையில் பார்வைதிறனற்றவர்கள் படிக்கும் வகையில் உள்ளது. மொத்தம் 1500 பிரெய்லி புத்தகங்களும் 145 இ புத்தகங்களும் 1080 ஆடியோ புத்தகங்களும் உள்ளன.
பி பிரிவு- மக்கள் அமைதியான சூழலை தேடி கையில் சொந்த புத்தகங்களுடன் வருவோருக்கு தரை தளத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருவோர் லேப்டாப், நோட்டுகள், புத்தகங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
முதல் தளம்- அ பிரிவில் குழந்தைகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்காக 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆங்கிலம், தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன் உள்ளிட்ட மொழி நூல்களும் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட சிடிக்களும் டிவிடிகளும் உள்ளன. இந்த பிரிவில் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்.
பி பிரிவு- நியூஸ் பேப்பர்கள், மேகஜின்கள், ஜேர்னல்கள் ஆகியவை இந்த தளத்தில் காணப்படுகிறது. பல்வேறு மொழிகளில் பிரசுரமாகும் 37 புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான சிறப்பு புத்தகங்களும் உள்ளன.
இரண்டாவது தளம் அ பிரிவு- பழம்பெரும் மொழியாம் செம்மொழிக்காகவே இந்த தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் மொழிக்கான புத்தகங்கள் உள்ளன. நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாடகம், கட்டுரைகள், உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்திற்கு இந்த தளம் நிச்சயம் தீனி போடும் என்பதில் சந்தேகமே இல்லை.
பி பிரிவு- அது போல் ஆங்கில பிரிவும் இங்கே உள்ளது. இதில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. உலகின் பல்வேறு முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்களும் உள்ளன. இந்த ஆங்கில புத்தகங்கள் 3ஆவது முதல் 7 ஆவது தளம் வரை காணப்படுகின்றன.
மூன்றாவது தளம்: ஜெனரல், கம்ப்யூட்டர் சயின்ஸ், லைப்பரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ், தத்துவயியல், உளவியல், மதம், சோசியாலஜி, புள்ளியியல் , அரசியல் அறிவியல்
4ஆவது தளம்: பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, மொழிகள்.
5ஆவது தளம் : பொது அறிவியல், கணிதம், அஸ்ட்ரானமி, இயற்பியல், வேதியியல் ,பூமி அறிவியல், ஜியோலஜி, பயோலஜி, ஜுவாலஜி உள்ளிட்ட புத்தகங்களும் மருத்துவம் தொடர்பான புத்தகங்களும் இங்கு காணப்படுகிறது.
6ஆவது தளம்: பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்பு, கணக்கியல், ஃபைன் ஆர்ட்ஸ், போட்டோகிராபி, மியூசிக், ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு
7ஆவது தளம்: வரலாறு, புவியியல், டிராவல், பயோகிராபி, ஈ லைப்ரரி உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த தளத்துடன் புத்தகங்கள் பகுதி முடிவடைகிறது.
கடைசியாக 8ஆவது தளத்தில் நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில் நூலகத்தின் இயக்குநர், லைப்ரரியன், துணை லைப்ரரியன் உள்ளிட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
நூலக திறப்பு நேரம்
இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கென தனிப்பிரிவும் இயங்கி வருகிறது. பொன்மாலை பொழுது என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. இங்கு பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுவர். இந்த நூலகத்தின் நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். சொந்த புத்தகங்களை கொண்டு வருவோருக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படுகிறது.
தற்போது கொரோனா காலம் என்பதால் நுழைவு வாயிலில் நூலகம் வருவோரின் உடல் வெப்ப பரிசோதனை சோதனையிடப்படுகிறது. அது போல் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே செல்லும்படி பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் கட்டணம்
இந்த நூலகத்தின் கட்டணமாக தனி நபருக்கு முதல் தடவை வருகையின் போது ரூ 250 வசூலிக்கப்படுகிறது. ஆண்டு சந்தா 100 ஆகும். அது போல் குடும்பத்தினர் இரு பெரியவர்கள், இரு குழந்தைகளுக்கு உறுப்பினர் கட்டணம் முதல் முறையாக ரூ 500 வசூலிக்கப்படுகிறது. ஆண்டு சந்தா ரூ 200 ஆகும். மூத்த குடிமக்களுக்கு ரூ 100 முதல் முறை வசூலிக்கப்படுகிறது. ஆண்டு கட்டணம் ரூ 50 ஆகும். மாணவர்களுக்கு ரூ 150 ஆரம்பக் கட்டணமாகவும் ஆண்டு கட்டணம் ரூ 75 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த நூலகத்தில் உறுப்பினராவதன் மூலம் ஈ புத்தகங்களையும் ஈ மேகஜின்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஈ லைப்ரரியும், வைஃபை வசதியையும் பயன்படுத்த அனுமதி உண்டு.
சென்னைக்கு புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங், கன்னிமாரா நூலகம், நேப்பியர் பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் என பல பெருமைகள் இருந்தாலும், நவீன சென்னைக்கு பெருமை சேர்க்கும் இடங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் உண்டு என்றால் அது மிகையாகாது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications