காத்திருந்து தாக்கி அழிக்கும்.. ஆக்ஸ்போர்ட் வேக்சின் எப்படி செயல்படும்?.. வியக்க வைக்கும் நுட்பம்!
லண்டன்: கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கும் AZD1222 தடுப்பு மருந்து எப்படி செயல்படும், அது எப்படி கொரோனாவை காலி செய்யும் என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
Recommended Video

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் மிக முக்கியமான கட்டத்தில் மனித குலம் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இதில் நல்ல செய்தி கிடைக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா எப்படி உள்ளே வரும்?
கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்ட் உருவாக்கி இருக்கும் இந்த தடுப்பு மருந்து எப்படி செயல்படுகிறது என்பது தெரிந்து கொள்ளும் முன் ஏன் கொரோனா வைரஸை மனித உடலின் எதிர்ப்பு சக்தி மூலம் அழிக்க முடியவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸில் இருக்கும் கூம்பு போன்ற புரோட்டின் செல்கள்தான் அந்த வைரஸின் வலிமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நமது உடலுக்குள் வந்ததும், கொரோனா வைரஸில் இருக்கும் இந்த கூம்புகள்தான் உடலில் உள்ளே இருக்கும் செல்களை துளைத்துக் கொண்டு செல்கிறது.
இதயத்தில் துளைக்கும்
அதாவது இந்த கூம்புகள் இதயத்தில் இருக்கும் சிறு சிறு செல்களை துளைத்து உள்ளே செல்லும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். கொரோனாவின் இந்த கூம்புகளை அழிக்க தெரியாமல்தான் தற்போது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திகள் குழம்பி வருகிறது. அதுவும் இந்த கொரோனா கூம்புகள் உடலுக்குள் சென்றதும் லட்சக்கணக்கில் பல்கி பெருகுகிறது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி சுதாரிக்கும் முன் இந்த கூம்புகள் அதிகம் ஆகி நமது உடலில் இருக்கும் செல்களை கொன்று விட்டு மொத்தமாக நமது உடலை ஆக்கிரமிக்கிறது. அதன்பின் உறுப்புகளை பாதிக்கிறது.
குறி வைக்கும்
தற்போது ஆக்ஸ்போர்ட் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இந்த கூம்புகளைதான் குறி வைக்கிறது. AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த தடுப்பு மருந்து எப்படி செயல்படுகிறது என்று இங்கு பார்க்கலாம். அடினோ வைரஸ் என்ற வைரஸ் மூலம்தான் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறது.அது என்ன அடினோவைரஸ் (adenovirus) என்று நீங்கள் கேட்கலாம். அடினோவைரஸ் (adenovirus) என்பது மிகவும் சாதாரணமான காய்ச்சலை உருவாக்க கூடிய ஒருவகை வைரஸ் ஆகும்.
அடினோவைரஸ் வகை
சிம்பன்சி வகை குரங்குகளில் இந்த அடினோவைரஸ் (adenovirus) காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை பொதுவாக தடுப்பூசி ஆராய்ச்சிகளில் பயன்படுத்துவார்கள். அதாவது மட்டுப்படுத்தப்பட்ட நோய் கிருமிகளை உடலுக்குள் கொண்டு சென்று, உடலில் இருக்கும் தடுப்பு சக்தியை தூண்டி விடும் வாகனம் போல அடினோவைரஸ் செயல்படும்.அதனால்தான் இதை vector வைரஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது சுமந்து செல்லும் வைரஸ்.
எப்படி செயல்படும்
அடினோவைரஸ் (adenovirus)தான் கொரோனா தடுப்பு மருந்தை உடலுக்குள் கொண்டு செல்லும் பேருந்து போல செயல்பட போகிறது. இது எப்படி உடலுக்குள் செல்கிறது என்று இங்கு பார்க்கலாம்,
முதலில் ஒரு அடினோவைரஸை எடுத்து அதை மட்டுப்படுத்துவார்கள். ஜெனிட்டிகள் முறைப்படி இதை மட்டுப்படுத்துவார்கள் .
அதன்பின் வைரசுக்குள் கொரோனா வைரசின் சிதைக்கப்பட்ட மரபணுவை ஏற்றுவார்கள்.
இதனால் அந்த அடினோ வைரஸ் பண்புகள் மற்றும் உருவத்தில் கொரோனா வைரஸ் போல மாறும்.
கொரோனா வைரசுக்கு இருப்பதை போலவே இதற்கு கூம்புகள் இருக்கும். ஆனால் இதை மட்டுப்படுத்திவிட்டதால் அதற்கு பலம் இருக்காது.
இந்த adenovirus தான் மட்டுப்படுத்தப்பட்ட கொரோனாவை உடலுக்குள் சுமந்து கொண்டு செல்லும்.
மொத்தமாக உருவாக்கும்
அடினோ வைரஸ் மூலம் இந்த தடுப்பூசி உடலுக்குள் போனதும் கொரோனோ வைரசில் உள்ளது போல கூம்புகளை உடலின் செல்களில் உருவாக்கும். செயற்கையாக லட்சக்கணக்கில் இந்த கூம்புகளை அது உடலில் உருவாக்கும். இதற்கு ஆண்டிஜென் என்று பெயர். ஆனால் இதற்கு சக்தி இருக்காது என்பதால் உடலை இது பாதிக்காது. ஆனால் இது உடலுக்குள் வந்ததை உடனே நமது எதிர்ப்பு சக்தி செல்கள் எனப்படும் ஆண்டிபாடிகள் கண்டுபிடிக்கும்.
ஆண்டிபாடிகள் களமிறங்கும்
நமது எல்லைக்குள் எதோ அந்நிய சக்தி வந்துவிட்டது என்பதை ஆண்டிபாடி கண்டுபிடிக்கும். உடனே அதற்கு பாடை கட்ட ஆண்டிபாடி தயார் ஆகவும். இனி இதுதான் நடக்கும்
அடினோ வைரஸ் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட கொரோனா உடலுக்குள் வரும். அது உடலுக்குள் லட்சக்கணக்கில் கூம்புகளை உருவாக்கும். இந்த கூம்புகளை ஆண்டிபாடிகள் கண்டுபிடிக்கும்.
வேகமாக அந்த கொரோனாவை நோக்கி செல்லும் ஆண்டிபாடிகள் அதில் இருக்கும் கூம்புகளை தாக்கி அழிக்கும். இந்த கூம்புகள்தான் லட்சக்கணக்கில் பிரிந்து வளர்கிறது என்பதால், அதை சரியாக குறி வைத்து ஆண்டிபாடிகள் தாக்கும். இந்த கூம்புகளின் செயல்திறன் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால், நமது ஆண்டிபாடிகள் பொறுமையாக அதை எப்படி அழிப்பது என்று ஸ்கெட்ச் போட்டு அதன்பின் தாக்கி அழிக்கும்.
இதுவே மட்டுப்படுத்தப்படாத ஒரிஜினல் கொரோனா என்றால், நமது ஆண்டிபாடி திட்டம் போடும் முன்பே, கொரோனா வைரஸ் நம்மை காலி செய்து இருக்கும்.
இந்த கொரோனா கூம்புகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால், அதை பொறுமையாக ஆண்டிபாடிகள் தாக்கி அழிக்கும். அதன்பின் இந்த கொரோனா கூம்புகளை எப்படி தாக்கி அழித்தோம் என்று ஜெனிட்டிக்கல் மெமரியில் ஆண்டிபாடிகள் நினைவு வைத்துக்கொள்ளும்.
அதன்பின் உடலுக்கு எப்போது உண்மையான மட்டுப்படுத்தப்படாத கொரோனா உள்ளே வந்தாலும் அதை உடனே தாக்கி அழிக்கும் . ஏற்கனவே செய்யப்பட்ட முறை ஜெனிடிக்கல் மெமரியில் ஆண்டிபாடிக்கு நினைவு இருக்கும் என்பதால், கொரோனா வைரஸை கண்டவுடன், அதன் கூம்புகளை அழிக்கும்.
என்ன சுருக்கம்
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், முதலில் டூப்ளிகேட் கொரோனாவை தாக்கி அழிக்க உடலின் எதிர்ப்பு சக்திக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்சி கொடுக்கும். அதாவது தடுப்பு சக்தியின் திறனை தூண்டிவிடும். அதன்பின் உண்மையான கொரோனாவை அழிக்கும் திறமையை தானாக தடுப்பு செல்கள் பெற்றுக்கொள்ளும். இப்படித்தான் நமது உடலுக்குள் இந்த ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து செயல்பட போகிறது.
மொத்தமாக அழிக்கும்
அதேபோல் இந்த தடுப்பு மருந்து வெள்ளை ரத்த அணுக்களில் ஒரு வகையான டி செல்களை உருவாக்கும்.இந்த டி செல்கள் ஏற்கனவே உடலில் இருக்கும் கொரோனா செல்களையும் அழிக்கும். இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் இதன் மூலம் குணமடைவார்கள். ஏற்கனவே உள்ளே வந்த வைரஸ்களை, அதனால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது. அதேபோல் புதிதாக வரும் வைரஸ்களை அழிக்கிறது. இரண்டு வகையில் இந்த தடுப்பு மருந்து செயல்படுகிறது. . இந்த தடுப்பு மருந்தின் சாதனை என்றால் இதுதான்.
வெற்றி பெற்றுள்ளது
இந்த தடுப்பு மருந்து சோதனை முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் 1000 பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டதில், எல்லோருக்கும் இந்த கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. மருந்து செலுத்தப்பட்ட மூன்று வாரங்களில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் பெற்று இருக்கிறார்கள் . 95% பேருக்கு மூன்று வாரம் கழித்து தடுப்பு மருந்து வேலை செய்ய தொடங்கி உள்ளது .
அதேபோல் இதன் மூன்றாம் கட்ட சோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. 10 ஆயிரம் பேரிடம் இதை சோதனை செய்ய இருக்கிறார்கள். அது வெற்றிபெற்றால் இந்தியாவில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும். இந்த ஆஸ்டெராசெனெகா நிறுவனம் தனது மருந்து உற்பத்திக்காக இந்தியாவை நாடி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது.












Click it and Unblock the Notifications