Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழைகளுக்கு சொந்த வீடு எட்டாக்கனியல்ல.. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்தான் இருக்கே!.. கவலையை விடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் எனப்படும் பிரதமர் வீட்டு வசதி திட்டம் என்றால் என்ன, அந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் உள்ளன, இந்த திட்டத்தின் மூலம் யார் யாரெல்லாம் பயன்பெறலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது பழமொழி. வீட்டை கட்டி பார் ஒரு கல்யாணத்தை செய்து பார் என்பார்கள். அது போல் வீடு கட்டும் கனவு என்பது பணக்காரர்கள் மட்டுமே என்றிருந்தது தற்போது ஏழைமக்களுக்கும் சாத்தியமாகியுள்ளது. ஆம், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம்தான் அது சாத்தியமாகியது. அந்த திட்டம் என்பது வீடில்லாத ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை வழங்குவது 2022-ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை வழங்குவது ஆகும்.

 How to apply for Prathan Mantri Awas yojana scheme?

இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடியாவார். இந்த திட்டம் 2015-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப கட்டுமான பொருட்களைக் கொண்டு வீடுகளை கட்டுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இரு வகைப்படும்

இந்த திட்டம் இரு வகைப்படும். ஒன்று பிரதமர் வீட்டு வசதி திட்டம் - நகர்ப்புறம் (PMAY-U), இன்னொன்று பிரதமர் வீட்டு வசதி திட்டம் - கிராமம் (PMAY-G) ஆகும். முதலில் நகர்ப்புறத்திற்கான திட்டத்தை பார்ப்போம். இந்த திட்டம் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கானது. பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள், வருவாய் குறைந்தவர்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

பிரதமர் வீட்டு வசதி திட்டம் - நகர்ப்புறம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருமான பிரிவினர் இந்த திட்டத்தின் கீழ் வீடுகளை பெற ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை இருக்க வேண்டும். எம்ஐஜி 1 பிரிவின் படி வீடு பெற ஆண்டு வருமானம் ரூ 6 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரை இருத்தல் வேண்டும். அது போல் எம்ஐஜி 2 பிரிவினர் வீடுகளை பெற ஆண்டு வருமானம் ரூ 12 லட்சம் முதல் ரூ 18 லட்சம் வரை இருத்தல் வேண்டும். சிறுபான்மை பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் இந்த திட்டத்தில் பயன்பெற ஜாதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பயனாளி குடும்பஸ்தர் என்றால் கணவர், மனைவி, திருமணமாகாத குழந்தைகள் இருக்க வேண்டும்.

வீட்டை பெற தகுதிகள் என்ன?

வீட்டின் அளவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 30 சதுர மீட்டரும், குறைந்த வருமான பிரிவினருக்கு 60 சதுர மீட்டரும், நடுத்தர வருமான பிரிவினர் 1-க்கு 160 சதுர மீட்டரும், எம்ஐஜி-2 பிரிவினருக்கு 200 சதுர மீட்டரும் ஆகும். 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அனைவருக்கும் 20 ஆண்டுகள் வீட்டுக் கடனில் மானிய வட்டி விதிகம் ரூ 6 லட்சத்திற்கு 6.50 சதவீதாக வழங்கப்படுகிறது.

வீடு கட்ட மானியம் எவ்வளவு?

எம்ஐஜி (நடுத்தர வருமான பிரிவினர்) பிரிவு வீடுகளுக்கு ரூ 9 லட்சம் கடனில் மானியம் 4 சதவீதமும் என்ஐஜி 2 பிரிவு வீடுகளுக்கு 12 லட்சம் ரூபாயில் 3 சதவீதமும் மானியமாக அனுமதிக்கப்படுகிறது. கிரவுண்ட் பிளோர் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண்டுக்கு ரூபாய் 6 முதல் 18 லட்சம் வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஏற்கெனவே சொந்த வீடு இருப்பவர்களுக்கு இந்த திட்டம் கிடையாது. இந்த திட்டத்தில் அரசு சார்பில் கடனாக ரூ 1.5 லட்சம் வழங்கப்படுகிறது.

ஆவணங்கள் என்ன தேவை?

இந்த திட்டத்தில் பயன்பெற சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அவை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்,எல்ஐசி பாலிசி, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை (பேங்க் ஸ்டேட்மென்ட்), இரு மாதங்களுக்கான ஊதிய ரசீது (சேலரி ஸ்லிப்) ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. 1. ஏப்ரல் 2015 மற்றும் மார்ச் 2017-ஆம் ஆண்டுக்கு இடையில் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்கள் உள்ளடங்கும். 2. ஏப்ரல் 2017, மார்ச் 2019-க்கு இடையே 200 கூடுதல் நகரங்கள் உள்ளடங்கும். ஏப்ரல் 2019 மற்றும் மார்ச் 2022-ஆம் ஆண்டு இடையே மீதமுள்ள நகரங்கள் உள்ளடங்கும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்- கிராமம்

அடுத்ததாக பிரதமர் வீட்டு வசதி திட்டம்- கிராமம் குறித்து பார்ப்போம். இந்த திட்டத்திற்காக ரூ 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும். 6 சதவீதம் ஆண்டு வட்டியுடன் ரூ 6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஒரு வேளை வாங்கும் கடன் ரூ 2 லட்சத்தை தாண்டாமல் இருந்தால் 3 சதவீத வட்டி குறைக்கப்படும். 25 சதுர மீட்டர்தான் இந்த திட்டத்தின் கீழ் வீட்டின் அளவாகும். இந்த கிராமப்புற பிரிவு திட்டத்தின்படி ஆன்லைன் பதிவு என்பது கிடையாது. மக்கள் தொகை 2011-இல் சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி கணக்கெடுப்பை வைத்து பயனாளிகள் கிராம சபையால் தேர்வு செய்யப்படுவார்கள்.

என்னென்ன வசதிகள்

தகவல்களை இரு பிரிவுகளும் ஒன்றுதான். ஆனால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டதன் நோக்கமே பயனாளிகள் யாரும் அலைக்கழிக்கப்படக் கூடாது, விடுபடக் கூடாது என்ற நோக்கத்தால்தான். வீடுகளுக்கான சுத்தமான குடிநீரையும் அரசே வழங்கும். 24 மணி நேரமும் மின் இணைப்பு, சுகாதாரம் பேணி காக்கப்படும். பயனாளிகளுக்கான தொகை டிஜிட்டல் முறையில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும். PMAY-G திட்டத்தின் கீழ் சமதளங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ரூ 1. 2 லட்சம் வரை கடனாக வழங்கப்படுகிறது. மலைகளில் கட்டினால் ரூ1.3 லட்சம் கடனாக வழங்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ 12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இரு வகை திட்டங்களுக்குமான வித்தியாசம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம் நகர்ப்புறத்தில் ஆன்லைன் மூலம், கிராமப்புறத்திற்கு ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். நகர்ப்புறத்தினர் http://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரியில் செல்லத்தக்க அடையாள அட்டைகளை விண்ணப்பிக்கலாம். PMAY 2019-லில் உங்கள் பெயர் உள்ளது என்பதை சரிபார்க்க மேற்கண்ட இணையதளத்திற்கு செல்லவும், பயனாளியை தேடுக என்பதை கிளிக் செய்து, ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். பின்னர் காண்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிராமப்புறத்தினர் பொது சேவை மையம் மூலம் கிடைக்கும் படிவத்தை பூர்த்தி செய்து பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதன் விலை ரூ 25 + ஜிஎஸ்டி. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் பெயரில் ஏற்கெனவே வீடுகள் ஏதும் இருக்கக் கூடாது. தனிநபர் வேறு எந்த வீட்டுத் திட்டத்தின் பலன்களையும் மாநில அல்லது மத்திய அரசால் பெறக் கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+