திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரே ஒரு அரசு வேலை.. 1,463 பேர் வந்ததால் திகைத்த அதிகாரிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு பதிவறை எழுத்தர் பணியிடத்துக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே ஒரே ஒரு பணி இடத்துக்கு நடந்த இந்த நேர்முக தேர்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்பட 1,463 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, 70 ஈர்ப்பு ஓட்டுநர், 33 பதிவரை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவு காவலர் 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதன்படி ஊராட்சி ஒன்றிய அளவில் ஈர்ப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு பணி ஓய்வுக்குள் அதிகபட்சமாக 71 900 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் இந்த பதவிகள் நிரப்பப்படுவதால் https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலி பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டது.
அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் வயது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 - 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரை வயது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும. பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும் ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அத்துடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதன்படியே பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தார்கள். இதன்படியே நேர்முகத்தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு பதிவறை எழுத்தர் பணியிடத்துக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பணிக்கு 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பத்து இருந்தார்கள் இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் நேர்முக தேர்வு நடந்தது. ஒரே ஒரு பணி இடத்துக்கு நடந்த இந்த நேர்முக தேர்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்பட 1,463 பேர் கலந்து கொண்டார்கள். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேர்முகத் தேர்வை நடத்தினர். ஒரே ஒரு அரசு வேலைக்கு 1463 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்ததால் வத்தலக்குண்டுவில் பரபரப்பு எழுந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications