18 ஆயிரம் பேர் பணி நீக்கம்; இன்டெல் அறிவிப்பு: வேலைக்கு வேட்டு வைக்கும் ஏஐ?
சான்பிரான்சிஸ்கோ: இன்டெல் நிறுவனம் தனது 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாகக் அறிவித்துள்ளது ஐடி துறை ஊழியர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்டெல் கார்ப்பரேஷன் கணினித்துறையில் செல்வாக்கு மிக்க ஒரு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமாகும். இது கலிபோர்னியாவிலுள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் அமெரிக்காவிலுள்ள சிறிய மாநிலமான டெலாவேரிலும் இது இயங்கிவருகிறது. இது கணிப்பொறி சார்ந்த சிப் தயாரிப்பில் ஈடுபடுவதுடன் அதனை விற்பனையும் செய்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த கம்பெனி சுமார் 124,800 பணியாளர்களைக் கொண்டுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்டெல் தனது செயல்பாடுகளை நெறிப்படுத்த போவதாக ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்களது பணியாளர்களில் 15% ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையின் படி இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்திருந்தது. ஆகவே, அந்த நிதி இழப்பைச் சரிசெய்ய இந்த ஆண்டு சுமார் 20 பில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் பல வழிகளில் திட்டமிட்டு வந்தது.
இன்டெல் தலைமை நிர்வாகி பாட் கெல்சிங்கர் வருவாய் இழப்பு சார்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாங்கள் முக்கியமான தயாரிப்புகளைப் பொறுத்தவரை முன்னோடியாக இருந்து செயல்முறை சார்ந்தும் தொழில்நுட்பம் சார்ந்தும் சில மைல்கற்களை எட்டினாலும், எங்களது Q2 நிதி செயல்திறன் என்னவோ ஏமாற்றத்தை அளித்திருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த இழப்பு பற்றி ஜின்ஸ்னர் பேசுகையில், "எங்கள் செலவைக் குறைப்பதன் மூலம், லாபத்தை மேம்படுத்தவும், எங்களின் இருப்பு நிதியை வலுப்படுத்தவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.
ஆகவேதான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் செலவைக் குறைக்கப் போவதாக இன்டெல் கூறியுள்ளது. மேலும் அடுத்த ஆறுமாதங்களில் எதிர்பார்த்ததை விட வருவாய் என்பது மிக சவாலாக இருக்கும் என்றும் இந்தக் கம்பெனி கணித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலில் ஒரு பெரிய தொழிற்சாலை விரிவாக்கத்தை நிறுத்துவதாக இன்டெல் அறிவித்தது. இந்த சிப் ஆலைக்குக் கூடுதலாக 15 பில்லியன் டாலர் செலவழிக்க இருந்ததைத் தள்ளி வைத்தது.
இதுதவிர, "வணிக நிலைமைகள், சந்தை நிலவரம், பொறுப்பான மூலதன மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படை கூறுகளை ஆராய்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று இன்டெல் விளக்கம் அளித்துள்ளது.
போட்டி நிறுவனங்களான என்விடியா, ஏஎம்டி, குவால்காம் ஆகிய வலுவான சவால்களை அளித்து வருகின்றன. அதை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் இன்டெல் இந்த ஆட்குறைப்பு யுக்தியைக் கையில் எடுத்தே ஆகவேண்டும். அதைவிட்டால் வழியில்லை என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இன்றைக்கு ஏஐ போன்ற அதிநவீன சாதனங்களின் உதவிகள் பெருகிவிட்டன. அதைப் பயன்படுத்தப் போவதாக இன்டெல் முன்பே முடிவெடுத்துவிட்டது. அதற்காகத்தான் இந்த ஆள் குறைப்பு என்றும் சிலர் சொல்கிறார்கள்.
பல ஆண்டுகளாக லேப்டாப் தயாரிப்பு மற்றும் முதல் தரவு மையங்கள் என அனைத்தையும் இயக்கும் சிப்களை உருவாக்கி சந்தையில் விற்பனை செய்து வரும் இன்டெல் ஒரு வலிமையான நிறுவனமாகவும் இதுவரை வலம் வருகிறது. சில ஆண்டுகள் முன் இதன் போட்டி நிறுவனமாக என்விடியா ஸ்பெஷல் ஏஐ ரோபோக்களைப் பயன்படுத்த ஆரம்பித்து முன்னோக்கிச் சென்றுவிட்டது. அதன்படி பார்த்தால் இன்டெல் தன்னை தாமதமாக ஏஐ தொழில்நுட்பம் பக்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
தைவானில் நடைபெற்ற கம்ப்யூட்டெக்ஸ் எக்ஸ்போவில் ஒரு முக்கிய உரையின் போது கெல்சிங்கர், இன்டெல்லின் சமீபத்திய Xeon 6 செயலிகளை சர்வர்களுக்காக அறிமுகப்படுத்தினார். மேலும் AI PCகளுக்கான அதன் அடுத்த தலைமுறை Lunar Lake chips பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, "ஏஐ ஆனது தொழில்துறை இதுவரை கண்டிராத புதுமைகளில் ஒன்றாகும். சிலிக்கான் மந்திரம் மீண்டும் கணினியில் அதிவேக முன்னேற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இது மனித ஆற்றல் எல்லைகளை உடைத்து எறியும். வரவிருக்கும் வருடங்களில் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும். மேலும் எங்களின் நிறுவன தயாரிப்புகள் ஆற்றல் திறன் மற்றும் மலிவு விலை ஆகியவற்றின் சிறப்பான கலவையாக இருக்கிறது" என்று கெல்சிங்கர் கூறினார்.
மைக்ரோசாப்ட் கடந்த ஜூன் மாதம் அதன் Copilot+ AI PCகளை வெளியிட்டிருந்தது. இது அதன் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை புதியதாகச் சேர்த்து வழங்கி இருந்தது. மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, டெல், ஹெச்பி, சாம்சங், லெனோவா என உலகின் மிகப் பெரிய கணினி உற்பத்தியாளர்கள் இந்தப் புதிய அம்சங்களை இணையம் மூலம் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் அப்டேட் செய்ய இருக்கின்றனர். எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள் ஏஐ கம்ப்யூட்டர் பிசிகள் 80% மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும் என்று இன்டெல் கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications