சொந்த ஊரிலேயே வேலை.. மாவட்ட நீதிமன்றங்களில் 2,323 பணியிடங்கள்.. 8ம் வகுப்பு தகுதி! இன்றே கடைசி நாள்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,323 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. உரிய அறிவிப்புகளை வெளியிட்டு, எழுத்து தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், பன்முக உதவியாளர், நகலர், டிரைவர், காவலர் என மொத்தம் 2,323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 638,
காவலர் / இரவுக்காவலர் - 459,
மசால்ஜி (பன்முக உதவியாளர்) - 402,
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242,
தூய்மை பணியாளர் - 202
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100
டிரைவர் - 27
தூய்மை பணியாளர் - 202, என 17 வகையான பணிகளில் மொத்தம் 2,323 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு, சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2024 தேதிப்படி 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சமாக 71,900 வரை சம்பளமாக கிடைக்கும்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இது குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.. ஆன்லைன் மூலம் இன்று (28.04.2024) முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ( 27.05.2024 )ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துவிட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/login கிளிக் செய்யவும். மாவட்ட வாரியாக பணியிடங்கள் பிரித்துகொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications