வங்கியில் அதிகாரி வேலை.. 4,455 காலிப்பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகியவற்றில் காலியாக உள்ள 4,455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி தேதி ஆகும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..
நாட்டில் வங்கி வேலைகளுக்கு என தனி மதிப்பு, மரியாதை சமூத்தில் உள்ளது. கை நிறைய சம்பளம், சலுகைகள், கவுரமான வேலை உள்ளிட்டவைகளில் வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடுபவர்களின் பெரும் கனவாக உள்ளது. தமிழகத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தபடியாக தேர்வர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ஐபிபிஎஸ், வங்கி பணிகளுக்காக வெளியிடும் அறிவிப்பு உள்ளது.

எஸ்.பி.ஐ தவிர்த்து பிற பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் இடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமே நிரப்பப்படுகின்றது. இதில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* பேங்க் ஆஃப் இந்தியா- 885
* கனரா வங்கி - 750
* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 200
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 260
* பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
* பஞ்சாப் & சிந்து வங்கி - 360
என மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி & வயதுவரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 01.08.2024- தேதிப்படி 20 வயது முடிந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்ப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படிக்கவும். https://www.ibps.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் (21.08.2024) கடைசி நாளாகும்.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரு.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
உச்ச நீதிமன்றத்தில் வேலை! மாதம் ரூ.46 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தேர்வு எழுத விருப்பம் உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றை கவனமாக தேர்வு செய்யவும். கவனக்குறைவாக தேர்வு செண்டர்களை தேர்வு செய்தால் தொலை தூரங்களில் தேர்வு மையம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.
தேர்வு எப்போது?: முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதமும், அதில் தேர்வு செய்யப்படுவோருக்கான முதன்மைத் தேர்வு வரும் நவம்பர் மாதமும் நடைபெறும். நேர்முகத்தேர்வு ஜனவரி / பிப்ரவரியில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf கிளிக் செய்யவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications