நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே.. மாதஊதியம் ரூ.43,000.. ஈரோடு ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு
ஈரோடு: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரூ.43 ஆயிரம் மாதசம்பளத்துடன் ஈரோடு மாவட்ட ஆவினில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பால்வளத்துக்கு என்று தனியாக அரசு சார்பில் துறை செயல்படுத்தி வருகிறது. ஆவின் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் உள்ளார். இந்நிலையில் தான் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஈரோடு மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள ஒரு வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடத்தை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும். இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் வரும் 16ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இருப்பினும் அன்றைய தினம் அனைவரும் காலையிலேயே அங்கே சென்றுவிட வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட அசல் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சித்தோடு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்பு எண் : 88836 00107
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications