தேர்வு எல்லாம் இல்லை.. மாதசம்பளம் ரூ.43,000.. மதுரை ஆவினில் சூப்பர் வேலை.. அசத்தல் வாய்ப்பு!
மதுரை: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவினில் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் தஞ்சாவூர், வேலூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட ஆவின்களில் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த வரிசையில் தான் தற்போது மதுரை மாவட்ட ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indiviual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது ஏப்ரல் 26ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் முறையில் தான் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் ஏப்ரல் 27 ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற ள்ளது. நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை பெற 94896 19036 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பொது மேலாளர் டிஆர்டி சாந்தி அறிவித்துள்ளார்.
****
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications