"அனுபவம் வேண்டாம்".. Accenture-ல் புது வேலைவாய்ப்பு! டிகிரி, இன்ஜினியரிங் படித்தோருக்கு நல்ல சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி, விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர் (Accenture) இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், இந்தூர், குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

அதேபோல், தமிழகத்தில் 2 இடங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஆக்சென்ச்சர் நிறுவனம் சார்பில் தற்போது அப்ளிகேஷன் டெவலப்பர் (Application Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிளஸ் 2 முடித்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ப்ரோகிராமிங் லேங்குவேஷ் பைத்தான் (Python)கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?
மேலும் வெப் டெவலப்மென்ட் ப்ரேம்வொர்க்ஸ் Django அல்லது Flask உள்ளிட்டவற்றை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டடாகும். அதுமட்டுமின்றி MySQL அல்லது PostgreSQL, வெர்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் Git., ப்ரண்ட் எண்ட் டெக்னாலஜிஸ் எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட துறையில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜை பயன்படுது்தி டிசைன், டெவலப், டெஸ்ட் சாப்ட்வேர் அப்ளிகேஷன் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் Troubleshoot மற்றும் Debug, Code Reviews உள்ளிட்ட பணிகளும் இருக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தெலுங்கானாவின் ஹைதரபாத் நகரில் பணியமர்த்தப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications