Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 4 ரிசல்ட்டை விடுங்க.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு.. குரூப் 1 தேர்வர்கள் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குரூப் IA-ல் (தொகுதி-1A பணிகள்) உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன் / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

after-group-4-results-tnpsc-issues-new-notification-important-update-for-group-1-aspirants

குரூப் 1 தேர்வு

05/2025, நாள்: 01.04.2025-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IA-ல் (தொகுதி-1A பணிகள்) உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன் / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 23.10.2025 முதல் 01.11.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள்

எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் (claim) நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. /விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்து இருந்தது. விஏஓ , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் 4,662 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

குரூப் 4 தேர்வு முடிவு

இந்த தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ஒரு பணியிடத்திற்கு 246 என கடும் போட்டி நிலவியது. இந்த தேர்வு நடைபெற்று மூன்று மாதத்திற்குள் ரிசல்ட் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவை இந்த மாதம் எதிர்பார்த்து இருந்தனர். தீபாவளி விடுமுறை முடிந்த மறுநாளே தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வு முடிவுகள் 4 மாதங்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதனைவிட குறைந்த நாட்களிலேயே முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களுடைய தரவரிசை மற்றும் மதிப்பெண்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

நியமன ஒதுக்கீட்டு விதிகள்

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் தேர்வர்கள் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அதற்கான விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்து இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+