For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெடியா? தேர்வு இல்லை.. மாத சம்பளம் ரூ.32,000.. ஏஐஏஎஸ்எல் நிறுவனத்தில் வேலை.. சென்னையில் தான் பணியே!

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஏஐ ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் செக்யூரிட்டி பிரிவில் ஆபிசர் மற்றும் ஜூனியர் ஆபிசர் பணிகள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.26 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற முடியும்.

ஏஐ ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (Air India Air Transport Services limited or AIATSL) என்பது விமான நிலையங்களில் ஒருங்கிணைந்த சேவையை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட நிறுவனமாகும். பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை முறைப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டது.

இது தற்போது 82 விமான நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சூப்பர்.. அமித்ஷாவின் கோரிக்கையை உடனே நிறைவேற்றியது மகிழ்ச்சி! திமுக அரசை பாராட்டிய அண்ணாமலை! சூப்பர்.. அமித்ஷாவின் கோரிக்கையை உடனே நிறைவேற்றியது மகிழ்ச்சி! திமுக அரசை பாராட்டிய அண்ணாமலை!

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

ஏஐ இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் சென்னையில் காலியாக உள்ள 73 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆபிசர் மற்றும் ஜூனியர் ஆபிசர் பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி செக்யூரிட்டி பிரிவில் ஆபிசர் பணிக்கு 44 பேரும், ஜூனியர் ஆபிசர் பணிக்கு 29 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.02.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு செய்வது தொடர்பான முடிவை அந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.26,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.32 ஆயிரம் வரை கிடைக்கும். அதன்படி ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.32 ஆயிரமும், ஜூனியர் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.26,500ம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம் பெயர் மற்றும் செல்போன் எழுதி இருக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது.

நேர்க்காணல் மட்டுமே...

நேர்க்காணல் மட்டுமே...

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களோடு நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணலானது Office of the HRD Department, Air India Unity Complex, Pallvarama Cantonement, Chennai - 6000 043 என்ற முகவரில் நடைபெற உள்ளது. நேர்க்காணல் பிப்வரி 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடைபெறும். அதன்படி ஆபிசர் பணிக்கானது நேர்க்காணலானது பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளது. ஜூனியர் ஆபிசர் பணிக்கு பிப்ரவரி 5ம் தேதி நேர்க்காணல் நடைபெற உள்ளது. இந்த நேர்க்காணலானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெறும்.

English summary
AI Air Transport Service Limited has decided to fill the vacancies in Chennai. The notification for this has now been released. The posts of Officer and Junior Officer are going to be filled in the security department through interview without examination. By applying for this job, degree graduates can get employment with a salary of Rs.26 thousand to Rs.32 thousand per month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X