அதிக சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைக்கு ஆசைபட்டு AI சிக்கலில் சிக்கிறாதீங்க பெண்களே! விவசாயமே நிரந்தரம்
சென்னை: திருமணத்திற்கே பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது.. ஒன்று ஐடியில் வேலை பார்க்கனும் அல்லது அரசு ஊழியராக இருக்கனும் போல.. ஏனெனில் நுகர்வு கலாச்சாரமும், ஏஐ தொழில்நுட்பமும் பலரது வேலைகளை காலி செய்ய போகிறது. இது ஒருபுறம் எனில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குனாத்தான் கல்யாணமே பண்ண முடியும் என்கிற அளவிற்கு விலைவாசி உயர்ந்துவிட்டது.
முன்பு திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டதாக சொல்வார்கள்..இப்போது ஐடி ஊழியராகவோ அல்லது அரசு ஊழியர்களாகவோ இருந்தால் தான் எளிதாக நிச்சயம் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு தான் பெண் கொடுக்க பெண் வீட்டார் பலர் விரும்புகிறார்கள்.

தனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர்..நன்றாக படித்திருக்க வேண்டும்.. வாரத்தில் ஐந்து நாள் தான் வேலைசெய்ய வேண்டும். லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டும். கார் வைத்திருக்க வேண்டும். வீடு தொடர்பான எந்த கடனிலும் மூழ்கி இருக்கக்கூடாது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். ஏன் பல பெண் வீட்டாரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
இப்படி நினைக்க காரணமும் இருக்கிறது. இன்றைய சூழலில் நல்ல வீடு வாடகைக்கு பார்க்க வேண்டும் என்றால், சென்னையில் குறைந்தது 25 ஆயிரத்தை எடுத்து வைக்க வேண்டும். இதுதவிர மளிகை சாமான்கள்,காய்கறிகள், செல்போன், டிவி, பிரிட்ஜ், கார், பைக், வாஷிங் மெசின், ஏசி போன்றவை வாங்குவதற்கு குறிபிட்டட வருடத்திற்கு ஒரு முறை இஎம்ஐ சுழற்சியாக வந்து கொண்டே இருக்கும்.

இது தவிர குழந்தைகளை நல்லபள்ளியில் சேர்க்கவும் கணிசமாக முதலீடு செய்ய வேண்டும். எங்காவது வாரம் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே 2 ஆயிரம் ஆகும்.தியேட்டருக்கு போனாலே 1000 ரூபாய் வரை வரும். இது தவிர உடைகள் வாங்க ஒரு குறிப்பிட்ட செலவும், பெற்றோரின் பராமரிப்புக்கு குறிப்பிட்ட செலவும் ஆகும். இதுதவிர மருத்துவ செலவும் கணிசமாக இருக்கும்.
சென்னையில ஒருவர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் சராசரியாக வாழ 60 ஆயிரம் ரூபாயாவது வேண்டும் என்கிற அளவிற்கு விலைவாசி இருக்கிறது. வீடு வாங்க சேமிக்க வேண்டும். குழந்தைகளின் உயர்கல்விக்கு சேமிக்க வேண்டும். முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க குறிப்பிட்ட பணம் சேமிக்க வேண்டும் .இவற்றுக்கு எல்லாம் சேர்த்தால் நிச்சயம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் தான் சென்னையில் ஓரளவு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ முடியும்.
சென்னையில் மடடுமல்ல, பெங்களூருவிலும் இதே நிலைமைதான். இப்படியான சூழல் காரணமாக பெண்ணை பெற்ற பலர் தங்கள் மகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம் ஓரளவு நிம்மதியான வாழ்க்கைக்கு கூட 60 ஆயிரம் வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுவதால், அதைவிட குறைவான சம்பளம் வாங்குவோருக்கு திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில் ஏஐ எனப்படும் எந்திரமனிதன் வந்து பலரது வேலைக்கும் உலை வைத்துள்ளான். எத்தனை பேருக்கு வேலைகள் இனி இருக்கும் என்பது நிச்சயம் இல்லை.. சாட் ஜிபிடியும், கூகுளின் ஏஐயும் பலரது வேலையை கண்முன்னே பறிக்க காத்துக்கொண்டிருக்கிறது. வேலையை இழக்க போகிறவர்களுக்கு மாற்று வேலைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து எந்த எதிர்காலமும் தெரியவில்லை.

இதனால் கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு செல்லும் இளைஞர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஊதியம் பெற்றால் வேலையை விட்டு நிறுவனங்கள் தூக்கும் நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே குறைந்த ஊதியத்திற்கு தான் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. உயர்ந்த சம்பளத்தில் வேலை என்பது மிகவும் அரிதாகி வருகிறது.
அது கொரோனா காலமோ அல்லது ஏஐ காலமோ, மளிகை கடையும், பால் கடையும், காய்கறி கடையும், விவசாயமும்தான் தடையின்றி செயல்பட கூடியது. என்னதான் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் வந்தாலும் இதை ஈடு செய்ய முடியவில்லை. எனவே விவசாயமும், மனிதனின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய வணிகமும்தான் எப்போதுமே நிரந்தரம். மாப்பிள்ளை பார்ப்பவர்கள் இதை கவனத்தில் வைக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் மக்கள்.
ஒரு பக்கம் பெண் கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள், மறுபக்கம் ஏஐ காரணமாகவும் சிக்கலை சந்திக்க போகிறார்கள். எனவே திருமணம் என்பது இனி நீங்கள் பார்க்க போகும் வேலையும்,உங்களின் சம்பளமும் தான் தீர்மானிக்க போகிறது. ஏஐ உருவாக்கியவர் 90ஸ் கிட்ஸ் ஆக இருப்பார் போல.. அதனால் தான் என்னவோ.. 2கே கிட்ஸ்களின் எதிர்காலத்திற்கு ஏஐ மூலம் சவாலை ஏற்படுத்தி உள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications