மதுரையில் ஐடி வேலை.. ரூ.96,000 டூ ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. இந்த சான்ஸை மட்டும் விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 0-1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.96 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர பிற நகரங்களில் ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

it jobs job jobs

அந்த வகையில் மதுரையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கான யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், சம்பளம் விபரம், என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி AMIGOWAYS Technologies நிறுவனத்தில் தற்போது PHP Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பேக்எண்ட் டெக்னாலஜிஸ்களான PHP, Laravel, Magento 2, WordPress, Codeigniter உள்ளிட்டவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

Coding பிரின்சிபிள்ஸ்களான SOLID, Object - Oriented Programming (OOP), டேட்டாபேஜ் மேனேஜ்மென்ட்களான MySQL, Magento 2
Extension Development, WordPress Plugin Development உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதோடு PHP Developer பணியில் 0
- 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் மேற்கண்ட திறமைகள் இருந்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.96,000 முதல் ரூ.1,00,000 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்ப காலம் என்பது இன்றைய நிலவரப்படி இன்னும் ஒரு மாதம் 3 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+