கோவையில் 15000 பேருக்கு வேலை உறுதி.. 22-ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..இளைஞர்களுக்கு கலெக்டர் குட்நியூஸ்
கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு வருகிற 22-ந்தேதி காலை 8 மணியளவில் அவினாசி ரோடு, நவஇந்தியாவில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஜவுளித்துறை, என்ஜினீயரிங், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை உள்பட பல்வேறு துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை வேலைவாய்ப்புக்கு பஞ்சமே இல்லாத மாவட்டம் ஆகும். அங்கு வேலைக்கு போகாவிட்டால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். ஏனெனில் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகளும், கம்பெனிகளும், ஐடி நிறுவனங்களும், கல்லூரிகளும், ஓட்டல்களும் அதிகமாக உள்ளன.சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையில் பல லட்சம் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் வேலை செய்து வருகிறார்கள். கோவை சென்னை போல் கிடையாது. எளிதாக யார் போனாலும் பிழைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில் பிழைப்பு தேடி வருபவர்கள் முதலில் அறை எடுத்து தங்கி, நல்ல வேலையை தேடி, செட்டில் ஆவது என்பது எளிதானது அல்ல. அதற்கு நிறையவே மெனக்கெட வேண்டும்.

என்ன தான் பெரிய நகரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை பொறுத்தவரை அதிகமாகவே இருந்தாலும் சென்னையில் வீட்டு வாடகை, வாகன செலவு, போக்குவரத்து செலவு, நடைமுறை செலவுகள் எல்லாமே அதிகம்.. ஆனால் கோவையில் அந்த அளவிற்கு இருக்காது. எந்த தொழிலும் தெரியாதவர்கள் கூட தொழிலை கற்றுக் கொண்டு, சிக்கனமாக வாழ்ந்தால், விரைவிலேயே அங்கு சூப்பராக செட்டில் ஆகிவிட முடியும். ஏனெனில் கோவையில் அந்த அளவிற்கு வேலைவாய்ப்பு, வாழ்வியல் சூழல் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். இந்நிலையில் கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு வருகிற 22-ந்தேதி நடைபெற போகிறது,
இதுபற்றி கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: "கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு வருகிற 22-ந்தேதி காலை 8 மணியளவில் அவினாசி ரோடு, நவஇந்தியாவில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், கோவை மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களைச் சார்ந்த உற்பத்தி துறை, ஜவுளித்துறை, என்ஜினீயரிங், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை மற்றும் மருத்துவம் என பல்வேறு துறையைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் மற்றும் தொழில் கல்வி பயின்றவர்கள் என அனைத்து விதமான கல்வித் தகுதியுடையவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம். மனுதாரர்கள் https://forms.gle/FrpzDbZW6y9Jfg7y5 என்ற Link-ல் தங்களது விவரங்களை முன்பதிவு செய்தல் கட்டாயம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இதன் மூலம் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications