மாதம் 10 ஆயிரம் அக்கவுண்டிலேயே விழும்.. திருச்சி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுனர்களின் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கலெக்டர் விரிவான தகவலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது "திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுனர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி அளவில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் மற்றும் 2018-19, 2019-20, 2020-21, 2021- 22 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுனர்களின் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுனர் சட்டம் 1961-ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications