தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 11 மாவட்டத்தினரா.. ராணுவத்தில் சேர ஆர்வமா? முக்கிய அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் தேனி, மதுரை , திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு அறிவித்துள்ளார்.
ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கான வாய்ப்பு நவம்பர் மாதத்தில் வருகிறது. ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து ராணுவத்தில் பணியாற்ற முடியும். அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ராணுவத்தில் முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவத்தில் சேர அக்னி பார்க் திட்டத்தை கொண்டு வந்தது . இந்த திட்டத்தில் இளைஞர்கள் ஏராளமானவர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

"ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல் அறிய மற்றும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த முகாமில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications