அனுபவம் வேண்டாம்.. 2025ல் படிப்பை முடித்தோருக்கு சூப்பர் வேலை.. சென்னையிலேயே ஐடி வேலை
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் Avasoft நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனங்களில் ஒன்று AVASOFT. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் அலுவலகம் உள்ளது.

சென்னை நாவலூரில் உள்ள எஸ்எஸ்பிடிஎல் பெட்டா பிளாக்கின் 3வது மாடியில் (Alphacity) இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவாசாப்ட் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
அவாசாப்ட் நிறுவனத்தில் தற்போது பிசினஸ் டெவலப்மென்ட் எக்ஸிக்கியூட்டிவ் (Business Development Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு முன்அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு 2025 ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்து சேல்ஸ் டீமில் பணியாற்ற தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பிரசென்டேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு அதற்கு தீர்வு காணும் திறமை இருக்க வேண்டும்.
இன்டர்நெட்டில் சர்ச் செய்யும் திறமை இருக்க வேண்டும். அதோடு நைட்ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மாலை 5.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலான ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. தகுதி, திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் Group Discussion, Tech Interview, Final Interview, HR Interview உள்ளிட்டவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அவாசாப்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்க தட்டி தூக்கலாம் -
விமான நிலையங்களில் வேலை.. திருச்சியிலும் காலியிடம்! டிகிரி போதும்.. இன்றே கடைசி நாள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications