பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. தமிழ்நாட்டில் மட்டும் 153 காலிப்பணியிடங்கள்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்க கூடிய பேங்க் ஆப் பரோடாவில் பயிற்சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
நாட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வங்கியாக இருப்பது பேங்க் ஆப் பரோடா. குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடாவில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
அப்ரெண்டீஸ் - பயிற்சி பணியிடங்கள் - 2700
மாநில வாரியாக, தமிழ்நாடு 159 காலிப்பணியிடங்கள், ஆந்திரப் பிரதேசம் - 38, அசாம் - 21 , பீகார் - 47, சண்டிகர் (UT) - 12 , சத்தீஸ்கர் - 48, தத்ரா மற்றும் நகர் ஹவேலி (UT) - 05, டெல்லி (UT) - 119, கோவா - 10, குஜராத் - 400, ஹரியானா - 36 , ஜம்மு காஷ்மீர் - 5 , ஜார்க்கண்ட் -15, கர்நாடகா - 440 , கேரளா - 52 மத்தியப் பிரதேசம் - 56, மகாராஷ்டிரா - 297, மணிப்பூர் -02 மிசோரம் - 05 , ஒடிசா - 29 புதுச்சேரி (UT) - 06 , பஞ்சாப் - 96 , ராஜஸ்தான் - 215 தெலுங்கானா - 154 உத்தரபிரதேசம் - 307 , உத்தரகாண்ட் - 22 , மேற்கு வங்காளம் - 104,
கல்வி தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். 01.11.2025 - தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்கு உட்படவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுக்ளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி ஊக்கத்தொகயாக ரூ. 15,000 அளிக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்டி/எசி பிரிவினருகு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 1.2.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிப்பினை படிக்க: https://bankofbaroda.bank.in/career/current-opportunities/engagement-of-apprentices-under-the-apprentices-act-1961












Click it and Unblock the Notifications