பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் வேலை.. 600 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 600 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எதாவது பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.13 ஆயிரம் வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியானது 1969 ஆம் ஆண்டு நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட 14 வங்கிகளில் ஒன்றாக மாறியது. புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்
தற்போது இந்த வங்கியில் 600 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மொத்தம் 600 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணி நியமனத்தை பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் இருக்கும். தமிழகத்திலும் பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
* 25.01.2026 அன்று தேதிப்படி, குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 28 வயது என நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உள்ளூர் மொழித் தேர்வு நடத்தப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக, SC/ST/Ex-s/PwD பிரிவினருக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு ரூ.150 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும்.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 15.01.2025. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2026 ஆகும். இந்த பணியிடங்கள் முழுக்க ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://drive.google.com/file/d/1jxRIPcTDSQA6b9fU2bmF2kyEdZmaRVWa/view












Click it and Unblock the Notifications