பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலை.. விண்ணப்பிக்க ரெடியா? மிஸ் பண்ணிடாதீங்க!
டெல்லி: தொழில்நுட்பதுறை அதிகாரி, சயின்டிபிக் அதிகாரி, தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட மொத்தம் 212 பணியிடங்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) உள்ளன. இவற்றுக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4162 பேருக்கு பயிற்சி பணி வாய்ப்புகளும் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேரடி பணிவாய்ப்பு மற்றும் பயிற்சி பணிவாய்ப்பில் எத்தனை காலிபணியிடங்கள் உள்ளது என்பதை விவாரமாக பார்ப்போம்:
நேரடி பணி வாய்ப்பு:
தொழில்நுட்பத் துறை அதிகாரி - 181
சயின்டிபிக் உதவியாளர் - 7
தொழில்நுட்பவியலாளர் - 24
மொத்த காலிப்பணியிடங்கள் - 212
பயிற்சி பணி வாய்ப்பு:
முதல் பிரிவு - 1,216
இரண்டாம் பிரிவு - 2,946
மொத்தக் காலிப்பணியிடங்கள் - 4,162
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கல்வி தகுதி, ஒவ்வொரு பணிக்கு தகுந்தாற்போல் உள்ளன. பிஇ அல்லது பட்டப்படிப்பு (விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து) படித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணிக்குமான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முழு பிடிஎப் பைலை பாருங்கள். இந்த செய்தியுடன் பிடிஎப் பைல் இணைக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்:
விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy2.pdf என்ற லிங்கில் பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://barconlineexam.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதி:
மே 22ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு மையம்:
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஏதேனும் ஒரு மையம் விண்ணப்பதாரருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல் நிலைத் தேர்வு, இரண்டாம் கட்டத் தேர்வு, தகுதித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy8.pdf என்கிற இணைப்பில் அறியலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications