உள்ளூரிலேயே பேங்கில் வேலை பார்க்கனுமா? கனரா வங்கியில் 3 ஆயிரம் பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கனரா வங்கி கிளைகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்துவிடுங்கள்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கியும் ஒன்றாகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. உலகம் முழுக்க சுமார் 9,600 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் ஏற்பட்டுள்ள 3,000 அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை உள்பட பல்வேறு கனரா வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: கேரளாவில் 200, கர்நாடகாவில் 600, புதுவையில் 5 என நாடு முழுவதும் மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னையில் 30 பணியிடங்களும், மதுரையில் 21 பணியிடங்களும், கோவையில் 27 பணியிடங்களும் என தமிழகம் முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் மொத்தம் 350 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
கல்வி தகுதி & வயது வரம்பு: டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உள்ளது.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர். 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்டில் தேர்வு செய்யப்படுவார்கள். இதனை தொடர்ந்து உள்ளூர் மொழித்திறன் பற்றிய தேர்வு நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்லாம். விண்ணப்பிக்கும் முன்பு மத்திய அரசின் அப்ரெண்டீஸ்ஷிப் இணையதளத்தில் (www.nats.education.gov.in) விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வது அவசியமாகும். அதன்பிறகு கனரா வங்கியின் இணையதளம் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்க கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்சி /எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(04.10.2024) கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf செய்யுங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications