மத்திய அரசு பள்ளிகளில் வேலை கிடைக்கும்! வந்தது சிடெட் தேர்வு அறிவிப்பு.. ஆசிரியர்களுக்கு செம சான்ஸ்!
சென்னை: மத்திய அரசின் தகுதி தேர்வான சிடெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் சிடெட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
ஆசிரியர் பணிக்கு கல்வி தகுதியுடன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாக உள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் பணியில் சேருபவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனஙகளில் சேர, சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பலரும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் இந்த தகுதி தேர்வை எழுதுகிறார்கள். இந்த நிலையில்தான், மத்திய அரசின் தகுதி தேர்வான சிடெட் தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 1-8 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர தகுதி பெறுவார்கள்.
சிபிஎஸ்இ இந்த தேர்வை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ஆம் தாள் தேர்வு நடைபெறும். தமிழ் உள்பட 20 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 50 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் சிடெட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்
நடப்பு ஆண்டில் டிசம்பர் பருவத்திற்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் சிடெட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அக்டோபர் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 16 ஆம் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணமாக முதல் தாள் மட்டும் எழுத ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு தாளையும் எழுத விரும்பினால் ரூ.1,200 கட்டணம் ஆகும்.
எஸ்.சி/ எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தாள் தேர்வுக்கு ரூ.500ம் இரண்டும் எழுத ரூ.600ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து அறிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும். சிடெட் முதல் தாள் (Paper 1) தேர்வில் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முடியும்.
2-ம் தாள் என்பது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்க விரும்பும் தேர்வர்களுக்கானது ஆகும். 1-8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்க விரும்புவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/09/20240917100.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications