மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. 300 பணியிடம்.. டிகிரி முடித்தால் போதும்.. 85,000 சம்பளம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்ட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 நிர்வாகி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்று இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த காப்பீட்டு நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.

ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* நிர்வாக அதிகாரி (ஜெனரலிஸ்ட்) - 285
* நிர்வாக அதிகாரி (இந்தி அதிகாரிகள்) - 15
கல்வித் தகுதி:
நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். ஏஓ இந்தி அலுவலர் பணிக்கு ஆங்கிலம் / இந்தி பாடங்களை கொண்ட முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
15.12.2025 தேதியிட்டு வயதுவரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் டெஸ்ட் (டையர் &1 டையர் 2) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01.12.2025
* விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2025
* டையர் 1 தேர்வு தேதி: 10.01.2026
* டையர் 1 தேர்வு தேதி: 28.02.2026
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://orientalinsurance.org.in/careers
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications