கைநிறைய சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி போதும்.. டிரைவிங் தெரிந்தால் சூப்பர்.. சென்னை BOAT-ல் வேலை
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் BOAT மையத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. 8 ம் வகுப்பு மடித்து டிரைவிங் தெரிந்தவர்கள் மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் கைநிறைய சம்பளத்தில் வேலையை பெற முடியும்.
மத்திய கல்வி துறை அமைச்சகத்தின் கீழ் பயிற்சியாளர் பயிற்சி வாரியம் -தெற்கு பிராந்தியம் (Boared OF apprenticeship Trainging - Sourthern Region) என்பது சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
அனலிஸ்ட்: தெற்கு பிராந்தியத்துக்கான பயிற்சியாளர் பயிற்சி வாரியத்தில் அனலிஸ்ட் (குரூப் - சி) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். டிகிரி முடித்து, தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அரசு, தனியார் நிறுவனங்களில் தொில்நுட்ப பணியாளர் குறித்த விபரங்களை தொகுத்து வழங்கும் பணியில் 8 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அப்பர் டிவிசன் கிளர்க் (குரூப் சி): இந்த பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்த டைப்பிங் திறமை பெற்றிருப்பதோடு, 5 ஆண்டு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
டிரைவர்: டிரைவர் (குரூப் சி) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் லைட், ஹெவி லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களும் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது-சம்பளம்: அனலிஸ்ட், டிரைவர் பணிக்கு 35 வயதுக்குள்ளும், அப்பர் டிவிசன் கிளர்க் பணிக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். அனலிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். அப்பர் டிவிசன் கிளர்க் பணிக்கு ரூ.25,500, டிரைவர் பணிக்கு ரூ.19,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 19ம் தேதிக்குள் www.boat-srp.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். முதலில் அக்டோபர் 9 ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அக்டோபர் 25ம் தேதிக்குள் ‛‛The Director of Training, Board of Apprenticeship Training (Southern Region), 4th Cross Road, CIT Campus, Taramani, Chennai 600 1132'' என்ற முகவரிக்கு கிடைக்கும்படி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு எங்கு: விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எ்டி, பிரிவினருக்கு கட்டணம் என்பது ரூ.500 ஆக உள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, கம்ப்யூட்டர் மூலம் நடக்கும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு என்பது சென்னையிலேயே நடக்கும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications