சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை.. 1 லட்சம் வரை சம்பளம்! நாளை ஒரு நாள் தான் இருக்கு!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மொத்தம் 19 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியது. உதவிப் பொறியாளர் (சிவில்), இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர், தமிழ்ப்புலவர், உதவி மின் ஊழியர், பாரா, குருக்கள் / அர்ச்சகர், காவலர் மற்றும் உதவி பரிசாரகர் போன்ற பல பதவிகள் நிரப்பப்படுகின்றன.

பணியிடங்களின் விவரங்கள்
உதவிப் பொறியாளர் (சிவில்) - 1,
இளநிலை உதவியாளர் - 2,
டிக்கெட் விற்பனையாளர் - 3,
தமிழ்ப்புலவர் - 1,
உதவி மின் ஊழியர் - 2,
பாரா - 6,
குருக்கள் / அர்ச்சகர் - 1,
காவலர் - 1,
உதவி பரிசாரகர் - 2.
கல்வித் தகுதி
* ஒவ்வொரு பணியிடத்திற்கும் வெவ்வேறு கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உதவிப் பொறியாளர் (சிவில்) பதவிக்கு சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* இளநிலை உதவியாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு (SSLC) அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* டிக்கெட் விற்பனையாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடனும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை கிரேடு சான்றிதழுடனும், கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் (COA) சான்றிதழும் கட்டாயம்.
* தமிழ்ப்புலவர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.லிட் / பி.ஏ / எம்.ஏ / எம்.லிட் பட்டம் பெற்றிருப்பதோடு, திருமுறை ஓதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
* உதவி மின் ஊழியர் பதவிக்கு எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் "H" சான்றிதழும் அவசியமாகும். பாரா மற்றும் காவலர் போன்ற பதவிகளுக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
* குருக்கள் / அர்ச்சகர் பதவிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருப்பதோடு, ஆகமப் பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* உதவி பரிசாரகர் பதவிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பதோடு, திருக்கோயில் ஆகமங்களின்படி நிவேதனம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியை உறுதிப்படுத்த, அறிவிப்பிலுள்ள முழுமையான விவரங்களைச் சரிபார்ப்பது முக்கியம்.
வயது வரம்பு
அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்க விதிகளின்படி, சில சிறப்புப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு
* உதவிப் பொறியாளர் (சிவில்) பதவிக்கு லெவல்- 35ன் கீழ் ₹36,700 - ₹1,16,200 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
* இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர் மற்றும் தமிழ்ப்புலவர் ஆகிய பதவிகளுக்கு லெவல்-22ன் கீழ் ₹18,500 - ₹58,600 வரை ஊதியம் கிடைக்கும்.
* உதவி மின் ஊழியர் பதவிக்கு லெவல்-18ன் கீழ் ₹16,600 - ₹52,400 வரை சம்பளம் கிடைக்கும்.
* பாரா பதவிக்கு லெவல்-17ன் கீழ் ₹15,900 - ₹50,400 வரை வழங்கப்படும்.
* குருக்கள் / அர்ச்சகர் மற்றும் காவலர் ஆகியோரின் பதவிகளுக்கு லெவல்-12ன் கீழ் ₹11,600 - ₹36,800 வரை ஊதியம் அளிக்கப்படும்.
* உதவி பரிசாரகர் பதவிக்கு லெவல்-10ன் கீழ் ₹10,000 - ₹31,500 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவத்தை www.hrce.tn.gov.in அல்லது https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கோயில் அலுவலக வேலை நேரங்களில் ₹50 செலுத்தி நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ₹75 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட, சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டை அல்லது உறையை இணைக்க வேண்டும். வயது, கல்வி, இனம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற சான்றிதழ்களின் சுய கையொப்பமிட்ட நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது கோயில் அலுவலகத்தில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை உறையின் மேல் "Application for the post of [பதவியின் பெயர்]" என தெளிவாகக் குறிப்பிடவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
விண்ணப்பதாரர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.12.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். நாளை தான் கடைசி நாள் என்பதால் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை முழுமையாகப் படித்து, தங்களின் தகுதியை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
-
IT JOBS: "அனுபவம் வேண்டாம்".. அரியர்ஸ் இருந்தாலும் சென்னை HCL-லில் வேலை.. மார்ச் 10ல் இண்டர்வியூ -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி











Click it and Unblock the Notifications