சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை.. மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! 14 ஆயிரம் சம்பளம்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையுடன் இந்த பயிற்சியானது வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்பது சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் போக்குவரத்து கழகத்தின் ஒரு மண்டல பிரிவாக மாநகர போக்குவரத்து கழகம் உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து கழகத்தில் வேலை
அதேபோல, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகளை பராமரிப்பதற்கு பணிமனைகள் இயங்கி வருகின்றன. பேருந்து டிரைவர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் என ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார்கள். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நேரடி நியமன முறையில் கண்டக்டர், டிரைவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
ரூ.14,000 உதவித் தொகையுடன்
அது தவிர பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை குரோம்பேட்டை
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ITI-பிரிவுகளில் (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electrician, Auto Electrician,
Fitter, Turner, Painter & Welder) மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன்ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று காலை10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சிபள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications