லட்சத்தில் சம்பளம்.. Cognizant-யில் சென்னை, கோவையில் பணி.. நாளை கடைசி நாள்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ படிப்பை 2023, 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க நாளை (மார்ச் 20)ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரம் வருமாறு:

காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் ஐடி அனலிஸ்ட் டிரெய்னி (IT Analyst Traineee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி மற்றும் பிசிஏ படிப்புகளை 2023 அல்லது 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதாவது பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் 10, 12ம் வகுப்பு, டிப்ளமோவில் 60 சதவீத மதிப்பெண்ணுடனும், இளநிலை படிப்பில் 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் என்பது இருக்க கூடாது. மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீம் வொர்க் முறையில் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் என்பது இருக்க வேண்டும்.
டிரெய்னி வகை பணி என்பதால் தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.80 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோருக்கு 2 பக்கத்தில் ரெஸ்யூம் இருக்க வேண்டும். ஹை ரிசொல்யூஷன்ஸ் கொண்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டா இருக்க வேண்டும். அதில் காதுகள் நன்றாக தெரிய வேண்டும். பின்னணி என்பது லைட் பேக்கிரவுண்ட்டாக இருக்க வேண்டும். அதேபோல் கல்லூரியின் அனைத்து சான்று மற்றும் ஐடி கார்ட் இருக்கும் பட்சத்தில் அதனை வைத்திருக்க வேண்டும்.
மேலும் பான்கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். பான்கார்டு இல்லாவிட்டால் உடனடியாக அப்ளை செய்ய வேண்டும். அதில் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும். பான்கார்டு விபரங்கள் ஏதேனும் தவறாக இருக்கும்பட்சத்தில் பணிக்க சேர்த்து கொள்ளப்படமாட்டார்க.ள் அதேபோல் வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்று இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது மார்ச் 20 (நாளை) தான். அன்றயை தினம் நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க முடியும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, புனே, மும்பை ஆகிய நகரங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் பணி வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications