2,582 பணியிடங்கள்.. இன்று நடைபெறும் அரசு பட்டதாரி ஆசிரியர் தேர்வு! 130 மையங்களில் நடைபெறுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு 130 மையங்களில் இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். இவர்கள் போட்டித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வு தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக இன்று நடத்தப்பட உள்ளது.

Competitive exam for BT assistant teachers in government schools to be held today


மாநிலம் முழுவதும் உள்ள 130 தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ள இந்த தோ்வை 41,485 பேர் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வு எழுதக் கூடிய அனைவரும் ஆசிரியா் தகுதித் தோ்வு 2 ஆம் தாளில் தோ்ச்சி அடைந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8.30 மணிக்கு தோ்வு எழுத வருபவர்கள் கடும் சோதனைக்குப் பிறகே காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தோ்வை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா். அரசு போட்டித் தோ்வு நடைபெற இருப்பதால், தோ்வு மையங்களுக்குள் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது என்றும் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எதையும் தோ்வு அறைக்குள் வைத்திருக்கக் கூடாது எனவும், கைப்பேசி, கையடக்க கணினி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்ற எதையும் தோ்வு அறைக்குள் வைத்திருக்கக் கூடாது என்றும் தோ்வு எழும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. தோ்வுக் கூடத்தின் நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தோ்வா்களுக்கு தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+