பொதுத்துறை வங்கி பணியில் சேரவும் இனி கிரெடிட் ஸ்கோர்.. தேர்வர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு
டெல்லி: வங்கிகளில் இனி பணியில் சேருபவர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் செக் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில், மத்திய நிதித்துறை பங்கஜ் சௌத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் அமைச்சர் கூறியதாவது:- பொதுத்துறை வங்கியில் சேருவதற்காக ஐ.பி.பி.எஸ். (IBPS) நடத்தும் பொது ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வங்கியில் பணிக்கு சேரும்போது நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க வேண்டும். அதாவது, வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கான தகுதியையும் திருப்பி செலுத்தும் திறனையும் பராமரிக்கும் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருப்பது அவசியம்.

கிரெடிட் ஸ்கோர் வேண்டும்
அவர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வைத்து இருக்க வேண்டும் என்பது வங்கிகளில் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும். வங்கி பணிகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தும் ஒரு தேர்வு முகமையாக வங்கிப் பணியாளர் தேர்வு அமைப்பு (IBPS) உள்ளது. எனினும், கிரெடிட் ஸ்கோர் என்பது விண்ணப்பிப்பதற்கான முன்நிபந்தனை அல்ல. வங்கிக் கணக்கு அல்லது இதுவரை கடன் வாங்காத விண்ணப்பதாரர்களுக்கு இந்த விதி பொருந்தாது:" என்று கூறினார்.
குறைந்தபட்சம் எவ்வளவு கடன் புள்ளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது அந்த வங்கிகளின் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும். இதில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணிக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
பணி ஆணை ரத்து
எனினும், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் பண பரிவர்த்தனைகள், கடன் அளிப்பு நடைமுறை, வாடிக்கையாளர் கணக்குகளை கையாள்வது போன்ற பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கடன் விவகாரத்தில் பொறுப்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முறை கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நியமனம் செய்யப்பட்ட 20 பேரின் சிபில்/ கிரெடிட் ஸ்கோர் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், அவர்களின் பணி ஆணை ரத்து அல்லது திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் புள்ளிகள் குறையும்
கிரெடிட்/சிபில் ஸ்கோர் என்ற கடன் புள்ளிகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் போது செக் செய்து கொடுக்கின்றன. வாடிக்கையாளர் இதற்கு முன்பு வாங்கிய வங்கி கடன்களை சரிவர செலுத்தாமலோ தாமதமாக செலுத்தினாலோ கிரெடிட் புள்ளிகள் குறையும். இந்த புள்ளிகள் குறைவாக இருந்தால் அதை ஒரு காரணமாக காட்டி வங்கிகளின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றன.
இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை.. இதை கணக்கிடும் நிறுவனம் என்ன மாதிரியான பார்முலாவை பின்பற்றுகிறது என்றே தெரியவில்லை என்பது பொதுமக்களின் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூட இந்த விவகாரத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.
வங்கிகளில் கடன்களுக்கு பரிசோதிக்கப்பட்டு வந்த கிரெடிட் ஸ்கோரை பணியில் சேருவதற்கான அளவு கோலாகவும் கொண்டு வருவது தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயல்முறையாக இருக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications