டிகிரி போதும்.. ரூ.44,900 டூ ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. சிஎஸ்ஐஆர்-ல் அசத்தலான வேலை.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள 444 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.44,900 முதல் ரூ.1.51 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR or Council of Scietific and Industrial Research) செயல்பட்டு வருகிறது.

இங்கு 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சிஎஸ்ஐஆர் எனும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி செக்சன் ஆபிசர் (Section Officer) பணிக்கு 76 பேர், அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் (Assistant Section Officer) பணிக்கு 368 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
கைநிறைய சம்பளம்.. பிளஸ் 2 முடித்தவரா நீங்கள்? ஐசிஎஸ்எஸ்ஆர்-ல் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
கல்வி தகுதி - சம்பளம்: இந்த பணியை பெற விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை வழங்கப்படும். அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 12ம் தேதிக்குள் https://www.csir.res.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், சிஎஸ்ஐஆர் துறை விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
தேர்வு மையம்: இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் எழுத்து தேர்வுக்கான மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 79690 49955 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications