மாத ஊதியம் ரூ.1.03 லட்சம்.. இந்திய உணவு கழகத்தில் 5054 பணியிடம்.. விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!
டெல்லி: இந்திய உணவு கழகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 5054 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி என்ஜினீயரிங், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்திய உணவு கழகம் என்பது மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. முதலில் சென்னையில் தலைமையகம் இருந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ளது.
ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆதார விலை நிர்ணயிப்பது, பொது வினியோக திட்டத்துக்கு நாடு முழுவதும் உணவு தானியங்கள் அனுப்துல், தேசிய உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு தானியங்கள் கையிருப்பு வைத்தல் உள்ளிட்ட பணிகளை இந்திய உணவு கழகம் மேற்கொண்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்திய உணவு கழகத்தில் மொத்தம் 5,054 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் வடக்கு மண்டலத்தில் 2388, தெற்கு மண்டலம் 989, கிழக்கு மண்டலத்தில் 768, மேற்கு மண்டலத்தில் 713, வடகிழக்கு மண்டலம் 185 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் JE (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயர்), Steno II, AGII (General), AG III (ACCounts,Technical, Hindi) உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் படிப்புகளை முடித்து இருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கும் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதோடு ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், தட்டச்சில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருந்க்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
இதில் JE (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயர்) பணிகளுக்கு மாதம் ரூ.34,000 முதல் ரூ.1.03 லட்சம் வரையும், Steno II பணிக்கு மாதம் ரூ.30,500 முதல் ரூ.88,100 வரையும், AGII (General) பணிக்கு மாதம் ரூ.28,200 முதல் ரூ.79,200 வரையும், AG III (ACCounts, Technical, Hindi) பணிக்கு மாதம் ரூ.28,200 முதல் ரூ.79,200 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயது என்பது 28 ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிங்களுக்கான அதிகபட்ச வயது என்பது 25, 27, 28 என்ற வகையில் மாறுபடும். வயது வரம்பானது 01.08.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் www.recruitmentfci.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய அக்டோபர் 5ம் தேதி கடைசிநாளாகும்.விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்தினாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்பம் செய்ய Click Here
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications